பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தென்னைமரத் தீவினிலே...

விஜயன் அருணகிரியை முத்தமிட்டு விடை பெற்றுக் கொண்டு, திறந்த கதவு வழியே வெளியேறி விட்டான்.

அருணகிரியின் மனமெல்லாம் தந்தை திடீரென்று தோன்றி திடீரென்று மறைந்து விட்டதைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது.

எந்த நிமிடமும் தன் தந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதை அவர் லிஸியாவிடம் பேசிக் கொண்டதிலிருந்து அருணகிரி உணர்ந்து கொண்டான். இதை நினைக்கையில் அவனுக்கு தன்னையும் மீறித் துக்கம் வந்து விட்டது.

சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்ததும் “அருணகிரி சீக்கிரமாக படுத்துக் கொள். காலையில் உன்னை சீக்கிரம் ஓட்டலில் கொண்டுபோய் விடுகிறேன். அங்குள்ளவர்கள் வெளியே போன உன்னைக் காணாமல் கவலைப்படுவார்கள் அல்லவா?” என்று கூறி அவனைப் படுக்கச் செய்தாள்.

இரவு மணி இரண்டு இருக்கும். திடீரென்று வெளியில் அழுகையும், இரைச்சலுமககக் கேட்கவுமே சட்டென்று விழித்துக் கொண்ட லிஸியா ஜன்னலை திறந்து பார்த்தாள், எதிர் வரிசையில் உள்ள சில வீடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. நிமிட நேரத்தில் அவளுக்கு எல்லாம் புரிந்து விட்டது. அவளைப் போலவே ஒன்றிரண்டு சிங்களவர்களைத் தவிர ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளில் தமிழர்களே