பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

37

சற்றைக்கெல்லாம் மேலே வந்த ஒரு வேலையாள், “அருணகிரி! உன்னை பெரிய யசமான் கூப்பிடுகிறார்; வா கீழே போகலாம்,' என்றான்.

“என்னை எதற்கு கூப்பிடுகிறார், ஏதாவது சொல்லித் திட்டவா?” என்று எண்ணிக்கொண்டே அருணகிரி கீழிறங்கி வந்தான். அருணகிரி, மாமா அருகில் வந்து நின்றபோது அவர் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

ஆமாம் “நான் தான் பொன்னம்பலம் பேசுகிறேன். கனகசபையை உடனே என் வீட்டுக்கு அனுப்பி வை. தாமதிக்கக் கூடாது,” என்று ஒரு உத்தரவு போல் கூறி விட்டு போனை கீழே வைத்தார்.

கொழும்பு நகரத்திலுள்ள செல்வாக்கு மிகுந்த முக்கியமான பிரமுகர்களில் பொன்னம்பலமும் ஒருவர். அவருக்கு சொந்தமாக பல ஆலைகளும், தொழிற்கூடங்களும், தோட்டங்களும், பங்களாவும் பல கார்களும் உள்ளன. இதனால் அவரது குரலில் எப்போதும் கம்பீரமும், அதிகாரத்தின் வாடையும் வீசிக் கொண்டிருப்பது வழக்கம்.

தன் அருகில் நின்று கொண்டிருந்த அருணகிரியை கண்டதும், ‘அருணகிரி; காந்திமதி, பாபு, ராதா, தங்கமணி எல்லாருக்கும் கொழும்பு நகரைச் சுற்றிப் பார்க்க வேண்டுமாம். கைடு

தெ-3