பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

55

பழைய டிரஸ்ஸையே தரச் சொல்லுங்க மாமா” என்றான்.

உடனே பரமகுரு செல்லமாக அவன் முதுகை தட்டிக் கொடுத்து, “அம்மா, ஒன்றும் சொல்ல மாட்டாள்; நான் பார்த்துக்கொள்கிறேன். மாமா வாங்கித் தந்தார்னு சொல்லு. உங்க அம்மாவுக்கு இந்த அண்ணன் என்றால் உயிர்,” என்று ஆறுதலாகப் பேசி உள்ளே அழைத்துச் சென்றார்.

பரமகுரு தான் வாங்கி வந்த விமான டிக்கெட்டை மாமாவிடம் கொடுத்து விட்டு; “சரியாக பத்தே முக்கால் மணிக்கு உங்களுக்கு ஃப்ளைட்” என்றார்,

“அதற்கென்ன, இன்னும் ஏகப்பட்ட நேரம் இருக்கே! சாப்பிட்டு விட்டு; ஒரு குட்டித் தேக்கம் கூடப் போடலாம்” என்றார் பொன்னம்பலம் சிரித்துக் கொண்டே.

மையற்காரர் எல்லோரைவும் சாப்பிட அழைத்தார், டைனிங் ஹாலுக்குள் நுழைந்ததும் அழகான மேஜை மீதுஎல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டிருந்தது. குழந்தைகள் எல்லோரும் ஒரு வரிசையாக பெரியவர்கள் எதிரில் தங்கள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டனர்.

அவர்கள் சாப்பிடச் சாப்பிட கேட்காமலே சமையற்காரர் ஒவ்வொன்றாய், புதிது புதிதாய் எதையாவது போட்டுக் கொண்டே