உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
தாமரைக் குளத்தில் தங்கமணி

தையை ஆரம்பித்தார் கனகசபை. ‘உங்களுக்கெல்லாம் ராவணனைத் தெரியும் என்று நினைக்கிறேன். அவன் இலங்கையை ஆண்ட அரசன் அவனுடைய தாயார் இறந்து விட்டாள். இறுதித் சடங்குகளை நடத்தும்போது, விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. குளிர் நடுங்கிற்று எல்லாரும் குளிக்க வேண்டுமே! உடனே மகா விஷ்ணு வெந்நீர் ஊற்று ஒன்றை உருவாக்கி இறுதிச் சடங்கு நடத்த உதவினார்.

இவ்வாறு வந்தவைதான் ‘கன்யா ஊற்றுகள்’ என்று கூறப்படுகிறது. இந்த நீரூற்றைச் சுற்றி ஆறு கிணறுகள் உள்ளன. நடுமத்தியில் உள்ள நீரூற்றில் இப்போதும் கொதிக்கும் வெந்நீர் ஊறிக் கொண்டிருக்கிறது. அதில் தண்ணீர் கலக்காமல் அப்படியே குளிக்க முடியாது அவ்வளவு சூடாக இருக்கும்.” அனைவரும் அங்கிருந்த விநாயகரை