உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 வாயிற்புறம் வந்தபிறகுதான் கறுத்த ஆதப்பன் ஊரில் இல்லை என்பதும், அவனை வாளுக்கு வேலிதான் மிக அவசரமான ஒரு பணிக்காக அனுப்பியிருக்கிறான். என்பதும் நினைவுக்கு வந்தது! ஆதப்பன் இல்லாததும் அவனுக்கு ஒரு வகையில் நல்லதாயிற்று. இருந்திருந்தால் அவனைச் சுந்தராம்பாள் வீட்டுக்குச் சென்றிடக் கல்யாணி நாச்சியார் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் விட்டதுபோல் விட்டிருக்க மாட்டான். தம்பி அப்போது இல்லை என்பதில் ஒரு நிம்மதி! ஆனால், தம்பி சென்றிருக்கும் காரியத்தை நினைக்கும் போது அவன் பத்திரமாகத் திரும்பி வர வேண்டுமே என்ற கவலை! திருப்பாச்சேத்தியில் ஆங்கிலேயக் கம்பெனியார். படைக்கு ஏற்பட்ட தோல்வியையும், மேஜர் கிரே அந்தப் போரில் கொல்லப்பட்டதையும் கேள்வியுற்ற கர்னல் அக்னியூ மற்றொரு கர்னலான வெல்ஷ் என்பவனுக்கு மருது பாண்டியர் படையை எப்படி மடக்க வேண்டும் என்பது குறித்து ஒரு இரகசியக் கடிதம் அனுப்பியிருக்கிறான். அந்தக் கடிதம் பட்டமங்கலம் அம்பலக்காரர் வல்லத்தரையனுக்கும் தெரியாமல் அவனது மைத்துனன்