உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 115 உறங்காப்புலி மூலமாக வெல்ஷ் துரைக்கு அனுப்பப்படு கிறது என்பதை வாளுக்கு வேலி முன்கூட்டியே தெரிந்து கொண்ட காரணத்தால் அந்தக் கடிதம் எப்படியும் வெல்ஷ் துரையின் கையில் கிடைக்காமல் செய்துவிட வேண்டு மென்றுதான் அந்த முயற்சியில் ஈடுபட ஆதப்பனை அனுப்பியிருக்கிறான். மானாமதுரைக்கும் பார்த்திபனூருக்கும் இடையே பாசறைகள் அமைத்துக் கொண்டு பறங்கியர் பட்டாளத்தைச் சிதற அடிப்பதற்குத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ள விடுதலைப் படையினர் விழிப்புடன் ருக்க வேண்டுமேயானால் வெல்ஷுக்குக் கர்னல் அக்னியூ அனுப்பியுள்ள கடிதம் பற்றிய விவரம் விடுதலைப் போர்த் தளபதிகளுக்குத் தெரிந்தாக வேண்டும். அந்த அரிய பணிக்காகவே ஆதப்பன், தன்னுயிரைத் திரணமாக மதித்துப் புரவியேறிப் பறந்திருக்கிறான். இந்த விஷயம் கல்யாணி நாச்சியாருக்குக் கூடத் தெரியாது. காரியத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டுத் தன்னை வந்து சந்திக்குமாறு அண்ணன் இட்ட ஆணையைச் சிரமேற்றாங்கிச் சிலிர்த்தெழுந்த ஆதப்பன் கூடக் கல்யாணியிடம் விபரத்தைச் சொல்லாமல் வேறு வேலையாக வெளியூர் போவதாகத்தான் கூறிவிட்டுச் சென்றிருக்கிறான். குதிரை சாரட்டு வேண்டாமென்று கூறும் பாகனேரி நாட்டு அம்பலக்கார வீட்டுப் பெண்கள் வழக்கமாகப் போகும் பெட்டி வண்டியைக் கொண்டு வரச் சொன்னான் வாளுக்குவேலி! இருபுறமும் பட்டுத் திரைகள் தொங்கும் அந்த வண்டியில் சென்றால், தன்னை யாரும் தெரிந்து கொள்ள முடியாது என்பதற்காக அந்தத் திடீர் ஏற்பாடு!