உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கலைஞர் மு. கருணாநிதி கம்பீரமான காளைகள் பூட்டப்பட்ட அந்த வண்டியைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு, வண்டிக்காரன் வாளுக்கு வேலியை வணங்கி நின்றான். வாயிற்புறமிருந்த காவலர்களை உஷார் படுத்திவிட்டு வாளுக்கு வேலி, வண்டியில் ஏறித் திரைகளை இழுத்து விட்டுக் கொண்டதும் தட்டிவிடப்பட்ட காளைகள், குதிரைகளுக்கு ஈடாக வேகம் காட்டிக் கிளம்பின. பாகனேரி எல்லையைத் தாண்டும்போது வாளுக்கு வேலி செல்லும் வண்டிக்கு எதிரே மற்றொரு வண்டி பாகனேரியை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தது. அந்த வண்டியில் இருபுறமும் தொங்கிய வெள்ளைத் துணியில் ‘சுந்தரி' என எழுதப்பட்டிருந்ததைக் கவனிக் காமலே வாளுக்கு வேலியின் வண்டி திருக்கோட்டியூர் பாதையில் கடுவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. டி எதிரே பாகனேரியை நோக்கி வந்த வண்டி சுந்தரிக்குச் சொந்தமானது! ஆலயத்திற்குச் செல்வது- அரங்குகளில் நடனமாடுவது தவிர வேறு எதற்கும் வெளியிற் சென்று பழக்கப்படுத்திக் கொள்ளாத சுந்தரி, வேற்றூர் செல்வதென்றால் திரையிடப்பட்ட பெட்டி வண்டியில்தான் செல்வது வழக்கம். அவளுடைய அந்த வண்டிதான் இப்போது பாகனேரிக்குள் நுழைந்து அம்பலக்காரர் வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வாளுக்குவேலியின் வீட்டு வாசலில் வந்து நின்ற அந்த வண்டியிலிருந்து முதலில் லலிதாங்கி இறங்கினாள். அவளைத் தொடர்ந்து நாதமுனி இறங்கினான். மூன்றாவதாக வடிவாம்பாள் இறங்கினாள். அதற்குள் சமையற்காரக் காடையும் கெளதாரியும் அவர்களைப் பார்த்துவிட்டுக் குதியாய்க் குதித்து விட்டார்கள். நீதானே திருக்கோட்டியூர் சுந்தரியோட தங்கச்சி வடிவாம்பாள்! உன்னை நாங்க செட்டியார் வீட்டுக்