உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 117 கல்யாணத்திலே பார்த்தோமே!" என்று வடிவைச் சூழ்ந்து கொண்டார்கள். வந்திருப்பது யார் என்று புரிந்து கொண்ட காவலர் களும் தடையேதுமின்றி வடிவையும் அவளுடன் வந்த வர்களையும் உள்ளே அழைத்துச் செல்ல அனுமதித்தனர். வடிவாம்பாள் நடந்து செல்வதே ஒரு நடனமாக இருப்பதையும், அவளது முன் அழகைவிடப் பின் அழகு, காந்தம்போல் கவர்ந்து இழுப்பதையும் அந்தக் காவலர்கள் இரசித்துக் களித்தனர். நவராத்திரியின்போது அம்பாள் அலங்காரம் என்றுமில்லாத அளவுக்கு எழிலுடன் விளங்குவது போல அன்றைக்கு வடிவாம்பாளின் அலங்காரம் விளங்கியது.. வாளுக்குவேலி தன்னைப் பார்த்தவுடன் காதல் வலையில் வீழ்ந்துவிட வேண்டுமல்லவா? அதற்கேற்ப அந்த அழகியின் அங்கங்கள் ஆடைக்கு வெளியே தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தன. அந்தச் சிறிய மாளிகையின் கூடத்தில் அவளையும் அவளுடன் வந்த இருவரையும் உட்கார வைத்து விட்டு, "இருங்கள்! இதோ கல்யாணி நாச்சியாரை அழைச்சிகிட்டு வர்றோம்! என்று காடையும், கௌதாரியும் உள்ளே ஓடிடத் துடித்தனர். "அம்பலக்கார அய்யா இல்லியா?" என்று லலிதாங்கி கேட்ட கேள்விக்குக் கிடைத்த பதில். வடிவுக்குத் தூக்கி வாரிப்போட்டது. "அவர் ஊரில் இல்லை!"" முதல் சந்திப்பிலேயே முகிழ்ந்துவிட வேண்டும். மோகம் என்று ஆசையை மலையாகச் சுமந்து கொண்டு வந்த வடிவாம்பாள் ஏமாற்றப் படுகுழியில் விழுந்தது. போல் உணர்ந்தாள்.