உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கலைஞர் மு. கருணாநிதி விட்டு இன்னும் வேகமாகப் போகுமாறு குதிரையைத் தனது குதிகால்களால் ஓங்கி உதைத்தான்! பொறுமை யிழந்தவளாகக் காணப்பட்ட வீரம்மாள், தனது இடை யிலிருந்த ஒரு கூரிய கட்டாரியை எடுத்து உறங்காப்புலி யின் குதிரைக்குக் குறி பார்த்து வீசினாள். குறி தவறாமல் குதிரையின் கழுத்துப் பகுதியில் கட்டாரி தாக்கியது. குதிரை வீறிட்டுக் குரல் கொடுத்தவாறு நின்றது. தள்ளாடியது. அது கீழே விழுவதற்குள் உறங்காப்புலி இறங்கிவிட்டான். வீரம்மாளும், தனது குதிரையை நிறுத்திவிட்டுக் கீழே குதித்தாள். இத்தனையும் பின் தொடர்ந்து பார்த்துக் கொண்டே வந்த கறுத்த ஆதப்பன், தனது குதிரையை ஒரு பெரும் புதரின் மறைவில் நிறுத்திக் கொண்டு கவனித்தான். உறங்காப்புலியின் அழகற்ற முகம் இப்போது விகாரத்தை யும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. எரியும் அடுப்பில் இருந்து எடுக்கப்பட்ட விறகுக் கட்டைகள் போன்று அவனது கொள்ளிக் கண்கள் அவளைக் கொத்துவதற்குத் துடித்தன. பற்களை அவன் நறநறவென்று கடித்தான். காட்டில் மூங்கில் மரங்கள் ஒன்றொடொன்று உராய்வது போல ஒலித்தது! "வீரம்மா! உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தால் இந்தக் காரியம் செய்வாய்?" "அய்யோ! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்! உங்களைத் தடுத்து நிறுத்த வேறு வழியில்லாத காரணத்தால், குதிரையைத் தாக்கி வீழ்த்தினேன்" "நீ என் கழுத்துக்குத்தானடி குறி பார்த்திருப்பாய். அது தவறிப்போய்க் குதிரையின் கழுத்தில் பாய்ந்து விட்டது!" அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்!"