உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 127 "பின்னே எப்படியடி சொல்வது? என் செயல்களில் குறுக்கிட நீ யாரடி? "நான் உங்கள் மனைவி "சே! மனைவி மானங்கெட்டவள்! வீரம்மாளின் கன்னத்தில் ஓங்கி அறைகிறான். அவள் நிதானமாக அவனைப்பார்த்து, "மனைவியாகக் கூட வேண்டாம்! இந்த மண்ணில் பிறந்த ஒரு தமிழச்சி என்ற முறையில் எனக்கு உங்களைத் தடுக்க உரிமை யுண்டு!" என்று சொல்லி முடிப்பதற்குள், உறங்காப்புலி தன் கையிலிருந்த முரட்டு நூல் கயிற்றால் அவளை வளைத்து விடுகிறான். கணவனே கண்கண்ட தெய்வம்/ கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்! பத்தினிக்கழகு பதி சொல் கேட்பது! இதெல்லாம் வெறும் வாயலங்காரம் என்பதை உன்னைப் பார்த்துத்தானடி தெரிந்து கொண்டேன்!"

  • "பிறந்த மண்ணுக்குத் துரோகம் செய்கிற கணவளை

காலம் முழுவதும் துரோகி என்றும் காட்டிக் கொடுத்த கயவன் என்றும் இந்த உலகம் தூற்றுமே! அந்தக் களங்கத்திலிருந்து என் கணவனைக் காப்பாற்றுவது என் கடமை!" ஓ! உன் கடமையை நீ செய்! என் கடமையை நான் செய்கிறேன்! வீரம்மாளைக் கயிற்றுடன் இழுத்து ஒரு மரத்தில் இறுகக் கட்டுகிறான். “வீரம்மா! இப்போது என்ன செய்வாய்? இங்கேயே இரு, நீ வந்த குதிரையிலேயே சென்று கர்னல் வெல்ஷ் துரையிடம் கடிதத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பி வரும்போது உன்னை அழைத்துப் போகிறேன்!"