உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கலைஞர் மு. கருணாநிதி அதைக் கேட்டு அவள் கொதித்துப் போனாள். என் சொல்லை மீறி நீங்கள் செல்வீர்களேயானால் திரும்பி வரும் பொழுது என் பிணத்தைத்தான் இந்த மரத்தடியில் காண்பீர்கள்! " உறங்காப்புலியின் பயங்கரச் சிரிப்பு! "அதுவும் பரவாயில்லை! ஒரு தொல்லை விட்டது!" அவன் பதிலைக் கேட்ட வீரம்மாள் கண்ணீர் பெருக்கியவாறு கதறினாள். "உங்க குணம் தெரிந்துதானே பாகனேரியார் வீட்டிலே பெண் கேட்டுக் கொண்டு படியேறாதே என்று விரட்டியடித்தார்கள்! நானும்தான் எவ்வளவோ மறுத் தேன். பட்டமங்கலம் நாட்டிலேயே ஒரு மணமகனைத் தேர்ந்தெடுங்கள் அண்ணா என்று எவ்வளவோ கெஞ்சினேன். இப்படிக் காட்டிக் கொடுக்கிற உங்களுக்கு மனைவியாக ஆக வேண்டுமென்று என் தலையெழுத்து இருந்திருக்கிறது!" வீரம்மாளின் சுடு கணைகளைத் தாங்கிக் கொள்ள முடியாத உறங்காப்புலி, அவள் கன்னங்களில் தனது இரும்புக் கரங்களால் மாறி மாறி அடித்தான். என்னை-நீயல்ல!- கடவுளே வந்தாலும் தடுக்க முடியாது!" என்று சூளுரைத்துக் கொண்டே அவள் ஏறி வந்த குதிரையில் ஏறுவதற்குச் சென்றான். "உன்னைத் தடுக்கக் கடவுள் தேவையில்லை. இதோ கறுத்த ஆதப்பன் வந்திருக்கிறேன்!" என எக்காளமிட்டுக் கொண்டு எதிரே நின்றான் ஆதப்பன்! 'வாடா! வா! அன்றைக்கு கர்னல் துரை முகாமிலே நான் உனக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்கவில்லை! இப்போது வாங்கிக்கொள் வட்டியும் முதலுமாக!"