உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 கலைஞர் மு. கருணாநிதி பட்டமங்கலத்து அம்பலக்காரர் இறந்துவிட்ட செய்தி இன்னமும் பாகனேரியை எட்டவில்லை! அதற்குள்ளேதான் இவ்வளவு மனக்குழப்பங்களும்! எதிரி நாட்டாளைப் போல ஒரு காளையை ஏவிவிட்டு-அதன் கூடவே வந்து உறங்காப்புலி, பாகனேரிக்குச் சவாலும் விடுத்து-அந்தச் சவாலை முறியடித்த வெற்றியைக்கூட அனுபவிக்க முடியாமல் பாகனேரி மாளிகை துயரத்தில் ஆழ்ந்து கிடந்தது. திருக்கோட்டியூரில் சுந்தரி வீட்டு ஊஞ்சல் மெது வாக அசைந்து கொண்டிருந்தது. வாளுக்குவேலியின் தோளில் தலையைச் சாய்த்தவாறு சுந்தராம்பாள் ஊஞ்சலை உந்தி ஆட்டிக் கொண்டிருந்தாள். "இப்படி பேசாமலே எவ்வளவு நேரம் நோன்பு இருக்கப் போகிறீர்கள்-உங்கள் இருதயத்தைத் துளைத்துக் கொண்டிருக்கும் எத்தனையோ பிரச்சினைகளுக்கு நான் ஒரு ஆறுதலாக இருக்க முடியுமென்று நீங்கள் நம்பவே இல்லையா?" வாளுக்குவேலி, சுந்தரியின் முகத்தைத் தனது குளிர்ந்த பார்வையால் நோக்கியவாறு, அவள் கூந்தலைக் கோதினான். அவளும் தனது பூப்போன்ற விரல்களால் அவனது கன்னத்தைத் தடவிக் கொடுத்தாள். 'உன்னிடம் துன்பத்தைப் போக்கும் மருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமலா இங்கு ஓடோடி வந்தேன்?"" என்று சொல்வது போல் இருந்தது அவன் சுந்தரியைப் பார்த்த பார்வை! 'கவலையைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது சங்கீத மென்று தெரியுமல்லவா?" சுந்தரியின் கேள்வியை வாளுக்குவேலி தலையை அசைத்து ஆமோதித்தான்... அத்துடன் அவன் நிறுத்தவில்லை!.