உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 193 'ஆடற்கலையும் ஆயாசத்தைத் தீர்க்கும்! அதிலும் ஆசைக்குரிய அழகு மயில் ஆடினால் ஆயாசத்தின் நிழல் கூட நெஞ்சில் விழாது!" என்றான்; புன்னகையைச் சிரமப்பட்டு வரவழைத்துக் கொண்டு! "உம்! ஆடு!" என்றான்! "நீங்கள் பாடினால்தான்/* அவள் ஊடினாள்! கூடலை எதிர்பார்க்கும் ஊடல் அல்ல; பாடலை எதிர் நோக்கும் ஊடல்! ஊஹும்! ஊஹும் என்று சற்று நேரம் சரசம்! செல்லக் கோபம்! கொஞ்சன்! கெஞ்சல்/ பின்னர் இசையெழுந்தது! சுந்தரியின் பாதாதி கேசம் வரையில் பாகுமொழித் தமிழால் பாராட்டி வர்ணிக்கும் பாடல் அந்த வர்ணனைக்கு ஏற்றவள்தான் என நிரூபிக்கும். வகையில் அவளும் ஆடினாள்! ஆட்டத்தின் முடிவில் மயங்கிக் கீழே விழப்போன சுந்தரியைத் தனது கை நிறையத் தழுவித் தூக்கிக் கொண்டான் வாளுக்குவேலி! அவளும் அப்படியே அவனது மார்பகத்தில் தனது மார்பகம் அழுந்த அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். 'சுந்தரி! சுந்தரி! மயக்கமா?" என்று பதறினான். "என்ன மயக்கமென்று தெரியவில்லையா?" என்று மலர் விரல்களால் அவன் இதழ்களை வருடினாள் சுந்தரி! நாம் செய்து கொண்டுள்ள சபதம் மறந்து விட்டதா? அவன் மிகுந்த குழைவுடனும் அவள் மீது அனுதாபத்துடனும் கேட்டான். "மறக்கமாட்டேன் அந்த வாக்குறுதியை! அதற்காக உங்களை மறக்கவும் மாட்டேன்! என்று அவன் மடியில் படுத்துக் கொண்டாள் சுந்தரி