உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 கலைஞர் மு. கருணாநிதி விடுகிறேன். அப்பத்தான் உடம்பு வலியெல்லாம் பறக்கும்.'" கௌதாரி கல்யாணியுடன் குளியலறைக்குள் நுழைந்து விட்டாள். "தயவு செய்து நீ வெளியே போ என்று செல்லமாக அதட்டினாள். "எம்மாடி! கொஞ்சம் பொறுமையா இருக்கணும்! நானே உடையெல்லாம் கழட்டுவேனாம்!" என்று கல்யாணியின் சேலைத் தலைப்பைக் களைந்தாள். கல்யாணி, சரேலெனச் சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டு, "நீ வெளியே போறியா வ்வையா?" என்று கோபத்தைக் காட்டிக் கொள்ளாமல் மிரட்டினாள். கௌதாரி விடவில்லை. குறும்புப் பேச்சு எல்லை மீறியது. ஓ' புரியுது! புரியுது! நான் உடம்பைப் பாத்துடக் கூடாதோ? தெரியும்! தெரியும்!... நகக்குறி பற்குறி யெல்லாம் என் கண்ணிலே பட்டுடுமாக்கும்!" கௌதாரியின் கள்ளமில்லா உள்ளத்திலிருந்து எழுந்த அந்தக் கேலியைக் கல்யாணியால் ரசிக்க முடியவில்லை! அதற்கு மாறாக ஒரு நீண்ட பெருமூச்சே வெளிப்பட்டது! அப்போதும் சௌதாரி விடவில்லை. "என்ன இது பெருமூச்சு? அவசரம் புடிச்ச பொழுது அதுக்குள்ளேயே விடிஞ்சிட்டுதேன்னு கவலையா? இருக்கும் இருக்கும்... எனக்குக் கூட முதல் நாள் அப்படித்தான் இருந்தது. இந்த காடையிருக்கே அது அன்னைக்கு என் தாடையெல்லாம் முத்திரை குத்தி வச்சுட்டுது! நாலு நாள் யார் முகத்திலேயும் என்னால முழிக்க முடியலே! கன்னம், கர்து, மூக்கு எல்லாம் காயம்!... சரியான முரடு... இந்த மாப்பிள்ளை நல்லவரு போல இருக்கு! கழுத்துக்குக் கீழேதான் கைவரிசையைக். காட்டியிருப்பாரு! இல்லையா அம்மாங்