உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 253 குறும்புச் சொற்கள்... கரும் பாக இனிக்க வேண்டியதற்குப் பதிலாகக் கல்யாணியின் செவி வழியாகக் குத்தீட்டிகள் எனப் பாய்ந்தன. ஆத்திரத்தையும் அழுகையையும் அடக்கிக் கொண்டு, போலிப் புன்னகையொன்றை அந்தப் பொல்லாத இரவு நிகழ்ச்சிக்கு மூடியாகப் போட்டு விட்டு "இப்ப நீ வெளியே போறியா இல்லையா? நான் தனியா குளிக்கணும்!" என்று கௌதாரியை இழுத்து வெளியே தள்ளிவிட்டு, குளியலறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டாள். முதலில் தனது தலையில் கை வைத்தாள். வலி தெரியாமலேயே, வாடிப் போயிருந்த மல்லிகைப் பூச்சரத்தை எடுத்துக் கீழே எறிந்தாள். குளியவறையில் இருந்த ஒரு பளிங்கு மேடையில் முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தவள் விக்கி விக்கி அழத் தொடங்கினாள்… அந்த அழுகையொலி மிக மெல்லியதாகக் குளியலறைக்கு வெளியே இருந்த கௌதாரியின் காதுகளில் விழவே, அவள் சந்தேகத்துடன், "நாச்சியாரம்மா!" என்று கூப்பிட்டுப் பார்த்தாள். உடனே பரபரவென்று கல்யாணி வெந்நீரை மொண்டு குவளை குவளையாகத் தலையில் ஊற்றிக் கொண்டு அந்த ஒலியில் தனது அழுகை ஒலியை மறைத்தாள்... அவள் விரைந்து குளித்த வேகத்தில் அணிகலன்களைக் கழற்றவும் ஆடையை அகற்றவும் கூட மறந்து போனாள். கௌதாரி வெளியில் இருந்தபடியே விரிவுரையாற்றிக் கொண்டிருந்தாள். "புகுந்த வீட்டிலே பிறந்த வீட்டை நினைச்சுகிட்டு இனிமே கவலைப்படக்கூடாது!" இந்த அறிவுரை கல்யாணியின் காதுகளிலும் விழுந்தது. அவள்தான் தனது வாழ்க்கையின் தொடக்கம்