உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 கலைஞர் மு. கருணாநிதி ட்கார்" என்று அவள் கரம் தொட்டு இழுத்தான் அவன்! ஒன்றும் வேண்டாம்" எனச் சிணுங்கியபடி அவள் அப்பால் நகர்ந்து கொண்டாள். "ஓ! இத்தனை நாள் வரவில்லை என்ற கோபமா? எனச் சிரித்தான் வாளுக்குவேலி! சுந்தரி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். “ஊடலில் தோற்றவர்தான் வென்றவராகக் கருதப்படுவார் என்று திருக்குறள் கூறுகிறது- தெரியுமா உனக்கு? அதனால் நீதான் தோற்க வேண்டும் இப்போது!" எனக் கூறிய வாளுக்குவேலி, தட்டில் இருந்த ஒரு பழத்தையெடுத்து கைகளில் உருட்டியவாறு எழுந்து அவளிடம் வந்து நின்றான். மிகவும் சிரமப்பட்டுச் சுந்தராம்பாள் கோபத்தைத் துணைக்குக் கூப்பிட்டுக் கொண்டு, அவளையும் மீறித் துள்ளிப் பாய்கிற புன்னகையை இதழ்ப் பேழைக்குள் பூட்டிப் போட்டு விட்டு வாளுக்குவேலியைப் பார்த்தாள்! "உங்களைப் போர்க்களத்தில்தான் யாரும் ஜெயிக்கக் கூடாது! இங்கேயும் அப்படித்தானா?" "போர்க்களம்! அதில் பல களங்களைச் சந்தித்தவன் நான்! ஆனால் இந்தக் களம்-இது ஒரே களம்தான் எனக்குப் பரிச்சயம்! வெற்றி தோல்வி யாருக்கு என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் மோதிப் பார்க்க வேண்டியதுதானே!" சுந்தராம்பாளுக்கு ஏற்பட்ட வெட்கம், அவளை அந்த இடத்தில் நிற்க விடாமல் துரத்தியடித்தது. பொய்க் கோபம் பறந்தது. ஓடிப்போய்ப் பஞ்சணையின் தலையில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பது அவளது துடியிடையின் அசைவினாலே அவனுக்குப் புரிந்தது. அவனும் போய்ப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவளது முதுகைத் தடவிக் கொடுத்துக்