உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 265 அந்த வீரர்களின் உருக்கமும் உணர்ச்சியும் கலந்த வேண்டுகோளுக்குச் சிறுவயல் மக்கள் செவி சாய்த்துத் தங்களால் முடிந்தவரையில் அந்த எழில் நகரத்தை எரிதழலுக்கு இரையாக்கி விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். கர்னல் அக்னியூ, குதிரையில் வட்டமிட்டபடியே தீப்பந்த வீரர்களை நோக்கிச் சுட்டுக் கொண்டேயிருந்தான். அவன் குறி தப்பாமல் பல வீரர்கள் மண்ணில் சாய்ந்தனர். அந்தக் கோரக்காட்சி கண்டு துடித்துப் போன தாடிக்காரக் கிழவன், தனது துப்பாக்கி கொண்டு கர்னல் அக்னியூ துரையின் மீது குண்டுகளைப் பாய்ச்சினான். குதிரை சுருண்டு விழுவதற்குள் அதிலிருந்து வேகமாகக் குதித்துவிட்ட கர்னல் துரை அக்னியூ அந்தக் கிழவனை நோக்கிச் சுட்டான். ஆனால் குண்டு பாயவில்லை. துப்பாக்கியில் குண்டு தீர்ந்து போயிருந்தது. கிழவன் இதுதான் சமயமென்று அக்னியூவின் மீது தனது துப்பாக்கியை நீட்டினான். ஒரே குண்டு! அதில் அக்னியூவின் தலை நொறுங்கி அங்கேயே வேண்டும் ஆனால் அந்தக் கிழத் தளகர்த்தனுக்குப் பெருத்த ஏமாற்றம்! அவனது துப்பாக்கித் தோட்டாக்களும் தீர்ந்து போயிருந்தன. கர்னல் அக்னியூ. தனது வாளை உருவிக்கொண்டு கிழவனை நோக்கி முன்னேறினான். கிழவனும் குதிரையிலிருந்து ஒரே தாவாகத் தாவி அக்னியூவின் முன்னால் வாளுடன் நின்றான். அந்த இருளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்த வீடுகளின் நெருப்பு ஜூவாலையில் இருவரின் போர் வாட்களும் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தன! கர்னல் கலகலவெனச் சிரித்தான். அது கனல் கக்கும் சிரிப்பாகவும் ஏளனத்தை வெளியிடும் எகத்தாளச் சிரிப்பாகவும் இருந்தது.