உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 கலைஞர் மு. கருணாநிதி 'ஓ! சின்ன மருதுவா? ஒல்ட் மேன் மேக் அப் நன்றாகத்தானிருக்கிறது! தப்பித்து ஓடுவதற்கு இப்படியொரு 'தந்திரமா? என் அன்புள்ள மருது! இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை! வாளைக் கீழே போட்டு விட்டு வாயைத் திறந்து ஒரேயொரு மன்னிப்பு! ஆமாம்-மண்டியிட்டவர்களை மன்னிக்கும் சுபாவம் கொண்டதுதான் ஆங்கிலேயக் கம்பெனி ஆட்சி! கொஞ்சம் சிந்தித்துப்பார் மருது! பெரிய மருதுவை விடச் சின்ன மருது திறமைசாலி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதோ எரிந்து கொண்டிருக்கிறதே உங்களுடைய நகரம்; இதைப் போல ஆயிரத்துக்கு மேற்பட்ட உங்களது கிராமங்களும் அவற்றில் இடம் பெற்றுள்ள எண்பதாயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளும் எரிந்து கருகிச் சாம்பல் பொடிகளாகக் காற்றில் பறக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? வீரத்தை மறந்து கொஞ்சம் விவேகத்தைத் துணைக்கு அழையுங்கள்! எங்களுக்குப் பணிந்து எங்களை வணங்கிய காரணத்தால் புதுக்கோட்டைத் தொண்டைமான் தொல்லையின்றி வாழ்கிற நிலைமையைப் பாருங்கள்! எட்டையபுரத்துப் பாளையக்காரர் எங்களை ஏற்றுக் கொண்டதால் எத்துணை அந்தஸ்துடன் வாழ்கிறார்! அது மட்டுமல்ல; இப்போது உங்கள் சிறுவயல் நகரை வளைத்திருக்கும் படைகளில் பெரும்பகுதி அந்த நட்பு நிறைந்தவர்களால் அனுப்பி வைக்கப் பட்டதேயாகும்! சிங்கங்கள் எங்கள் காலடியில்! சிவகெங்கைப் புலிகள் மட்டும் வீணாக உறுமுவானேன்?" கர்னலின் இதோபதேசத்தைக் கேட்டு, தாடிக்காரத் தளபதி எத்தகைய மன மாற்றத்திற்கும் ஆளாகவில்லை. கர்னலின் நெஞ்சுக்கு நேராக நீட்டிய வாளுடன் அந்தத் தளபதி நின்று கொண்டிருந்தானே தவிர பதில் ஏதும் பேசவில்லை.