உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 கலைஞர் மு. கருணாநிதி மீது நான் வலுச்சண்டைக்குப் போகவில்லையே! கறுத்த ஆதப்பன்தானே தேவையில்லாமல் சிறு வயலுக்கு வந்து என்னை எதிர்த்தான்!" 'கள்ளர் நாடுகள் மீது போர் தொடுப்பதும், அவற்றைத் தங்கள் காலடியில் கொண்டு வருவதும் கூடாது என்பது எனது வாதமல்வ! பட்டமங்கலத்தில் வைரமுத்தனைத் துரத்திவிட்டு, அம்பலக்காரப் பட்டத்தை எனக்கு அளிப்பதாக வாக்குறுதியே கொடுத்திருக்கிறீர்கள். அதை நான் மறந்துவிடுவேனா? ஆனால் எதற்கு நேரம் வேளை-சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கள்ளர் நாடுகளில் இன்று முக்கியத்துவம் பெற்றிருக்கிற பாகனேரியும் பட்டமங்கலமும் ஒன்றோ டொன்று மோதிக் கொண்டு இரண்டுமே வீழ்ச்சியடைவதில் தானே நமது வெற்றியே இருக்கிறது என்று முன்பே தங்கள் மூளையில் ஒரு ராஜதந்திரம் முளைத்ததே! அது இப்போது கருகிவிட்டதா பிரபூ அவர்கள் உரையாடலின் நடுவே ஒரு சிப்பாய் உள்ளே ஓடி வந்தான். "பிரபூ! பட்டமங்கலத்து வைரமுத்தனும் அவனுடன் பத்துப் பதினைந்து குதிரை வீரர்களும் கைகளில் ஆயுதம் தாங்கி நமது நாலு கோட்டையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்!" இந்தச் செய்தியை அந்தச் சிப்பாய் சொன்னான். "பார்த்தீர்களா? புதிய பகை புறப்பட்டு விட்டது! சொன்னது சரியாகி விட்டது!" என்றான் நான் உறங்காப்புலி. "சரி!சரி! எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். உறங்காப்புலி! நீ இங்கிருப்பது வைரமுத்தனுக்குத் தெரிய வேண்டாம்; வேறிடம் சென்று மறைந்து கொள்! என் படுக்கையறைக்குப் போய் விடு!" அவசரப்படுத்தினான் அக்னியூ