உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 கலைஞர் மு. கருணாநிதி அவளுக்கும் தூக்கம் வரவில்லை. காலையில் கல்யாணி கேட்டாலோ அல்லது வைரமுத்தன் கேட்டாலோ ஆதப்பன் அவசரமாகப் புறப்பட்டுப் போனதற்கு என்ன காரணம் சொல்வது என்ற சிந்தனை சிறகடித்துக் கொண்டிருந்தது. விடியப்போகும் நேரம்! உலகம் மெல்ல மெல்லத் தனது கருநிற ஆடையைக் களைந்து கொண்டிருந்தது. வீரம்மாளின் அறைக்கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டது. பதட்டமடையாமல் திரும்பிப் பார்த்தாள். உறங்காப்புலி, கொட்டாவி விட்டுக் கொண்டே உள்ளே நுழைந்து, தனது உடைவாள் முதலியவற்றைக் களைந்துவிட்டு வீரம்மாளுடன் படுக்கையில் பொத்தென்று விழுந்தான். "மெதுவா! மெதுவா! என்ன அவ்வளவு அசதி? உங்கள் வெள்ளைக்காரக் கூட்டம்தான் வெற்றிமேல் வெற்றி குவிக்கிறதே! பிறகேன் சோர்வு?" எனக் கேலியாகவும் மனக் குமுறலோடும் கேட்ட வீரம்மாளை முரட்டுத் தனமாகச் சேர்த்துக் கட்டிப் பிடித்துக் கொண்டு உறங்காப்புலி, "பைத்தியம்! பைத்தியம்! இன்னும் உனக்கு அந்தப் பழைய கதைதான் ஞாபகமா? அதற்குப் பிறகு நான் எவ்வளவு திருந்தி விட்டேன் தெரியுமா? கோபால நாயக்கர், மருது பாண்டியர் கூட்டத்துக்கு எனது முழுச் சக்தியையும் பயன்படுத்தி, எவ்வளவு உதவிகள் செய்து வருகிறேன் என்பது உனக்குத் தெரியாது. காலம் வரும்! என் மீதுள்ள களங்கம் தீரும்! அந்தக் கம்பெனிக்கார வெள்ளைக்கார வெறியர்களை விரட்டியடிப்பதுதான் வீரம்மா- உனது கணவனின் குறிக்கோள்! புரிகிறதா?" என்று விவரித்துக் கொண்டே அவள் இதழ்களில் அவனது தடித்த உதடுகளை அழுத்தினான்.