உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 315 அவளை அலட்சியமாகப் பார்த்துக் கொண்டே உறங்காப்புலி தனது மீசையை முறுக்கினான். 'வீரம்மா! ஆதப்பன் இங்கிருந்து தப்பியோடு வதற்கு நீ செய்த அனைத்து ஏற்பாடுகளையும் நானறிவேன். பரவாயில்லை; உன்னை மன்னித்து விட்டேன். ஆனால், இந்தச் செய்தி வெளியே தெரிந்தால் பட்டமங்கலம் உன்னை மன்னிக்காது!" "பகைவனையும் மன்னித்தோம் என்ற செய்தி கேட்டால் ஊரும் உலகமும் மன்னிக்கும்! ஆனால், பகைவனின் கைப்பாவையாகி நமது மண்ணைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தோம் என்ற செய்தி கேட்டால்தான் உலகம் மன்னிக்கவே மன்னிக்காது!" ஓகோ! நீ மறுபடியும் மறுபடியும் அந்த மறந்து போன பழைய கதையிலேயே இருக்கிறாயா? சர்வ வல்லமையுள்ள பட்டமங்கலத்துப் பிள்ளையார் மீது சத்தியமாகச் சொல்லுகிறேன். அந்த வெள்ளைக்கார அதிகாரிகளுக்கும் எனக்கும் என்முனைத் தொடர்பு கூட இப்போது கிடையாது! விடுதலைப் போர் அணியிலே நான் ஒரு அங்கம்! ஆனால் ஒன்று-அதற்கும், பாகனேரி அம்பலக்காரக் குடும்பத்தைப் பழிவாங்குவதற்கும் எந்த விதச் சம்பந்தமும் கிடையாது!" சரி! போகிறீர்கள்?" ஆதப்பனை என்னதான் செய்யப் "இன்னும் கொஞ்ச நேரம்தானே இருக்கிறது பொழுது விடிவதற்கு! விடிந்த பிறகு செய்தி வரத்தானே போகிறது - நியும் இந்த ஊரும் வேடிக்கை பார்க்கத்தானே போகிறீர்கள்!" "தயவு செய்து கேளுங்கள் பாகனேரிப் பெண் பட்டமங்கலத்தில் வாழ்வதை மறந்து விடாதீர்கள்.