உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 கலைஞர் மு. கருணாநிதி உங்கள் காலில் விழுகிறேன். கல்யாணிக்காகவாவது என் பேச்சுக்குக் கொஞ்சம் காது கொடுங்கள். "வீரம்மா! அந்தப் பாகனேரிப் பெண் இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று நீயும் நானும் உன் தம்பி வைரமுத்தனிடம் வாதாடியதை மறந்து விட்டாயா?" 'வாதாடினோம் -உண்மைதான்! ஆனால் வந்து விட்ட பிறகு என்ன செய்ய முடியும்?" "பாம்பு வீட்டுக்குள் வந்துவிட்ட பிறகு அடித்துக் கொல்லுகிறோம் கொல்லைப்புறத்தில் அது குடியிருந்த புற்றையும் இடித்துத் தள்ளுகிறோம்! அப்படித்தான் கல்யாணியையும், அவள் பிறந்து வளர்ந்த பாகனேரிக் குடும்பத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டும்/" வந்தது பாம்பா; பச்சைக்கிளியா என்பதிலே நமக்குள்ளே வேறுபாடு இருக்கும்போது, உங்கள் உவமைகள் எதுவுமே பொருந்தாது! கொஞ்சம் கேளுங்கள். இன்று இரவுதான் வைரமும் கல்யாணியும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்கள். அதற்குள் ஒரு படுகுழி வெட்ட வேண்டுமா அவர்களின் பரவசத்திற்கு? தீய காரியங்களைச் செய்தவர்களைக் கூட அவர்களுக்கு நன்மை செய்வதின் மூலம் நாணித் தலை குனியச் செய்து விடலாம் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். அதனால் நடந்தவைகளை மறந்து நமது பொது எதிரியான வெள்ளைக்காரர்களை வென்றிட ஒன்று கூடும். முயற்சியில் ஈடுபடுங்கள்!" "வீரம்மா! வெள்ளையரை எதிர்ப்பது நமது மண்ணை மீட்கும் பிரச்சினை! பாகனேரி அம்பலக் காரரைப் பழி தீர்ப்பது நமது மானம் காக்கும் பிரச்சினை இரண்டையும் இணைத்துக் குழப்பாதே! பாஞ்சாலியைப் பல பேர் முன்னிலையில் மானபங்கப் படுத்தியதற்காகத்