உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 கலைஞர் மு. கருணாநிதி அவன் விரும்பிய போதெல்லாம் மயில், குயில், மாடப்புறா, தேன்சிட்டு என்று ஏதாவது ஒன்று வரும்/ இரவு இன்பம் தரும்! அதற்குரிய கட்டணமும் பெறும்! அன்று என்னவோ மயிலுக்கு அடித்தது யோகம்! அவள் முகத்தருகே தன் வாயைக் கொண்டு போனான் உறங்காப்புலி! முத்தமெனக் கருதி மற்றவர் விலகினர்! "மடையர்களே! நில்லுங்கள்! இவன் காதைத் தான் கடிக்கப் போகிறேன் என்றான் அவன். அதாவது ரகசியம் சொல்லப் போகிறானாம்! ஆதப்பன் பாகனேரிக்கான பாதையில் அந்தப் பாழ் மண்டபத்தைக் கடக்கும் வேளை! பட்டமங்கலத்தி லிருந்து மண்டபம் இருக்குமிடம் சிறிதுதூரம்தான்! ஒரு மூலை, திரும்ப வேண்டி, குதிரையின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்தான். அந்த இடத்திலேதான் பாழ் மண்டபம் இருக்கிறது. அது ஆதப்பனுக்குத் தெரியாது. இருட்டிலும் அந்தச் சாலையின் நடுவில் ஒரு பெண் அலங்கோலமாகக் கிடந்ததை ஆதப்பன் பார்த்து விட்டான். குதிரையை இழுத்து நிறுத்திக் கீழே குதித்தான். அந்தப் பெண்ணின் அருகே சென்று, 'அம்மா, யாரம்மா நீ?" என்று கேட்டான். அவள் பதில் கூறவில்லை. முனகிக் கொண்டி ருந்தாள். அவளருகே அமர்ந்து அவளது தலையை அசைத்துப் பார்த்து, நாடி சரியாக இருக்கிறதா என்று கையைப் பிடித்துக் கவனித்தான். அவள் வாயிலிருந்து கிளம்பிய மது நாற்றம், மூக்கைத் துளைத்தது. ஏதோ நினைத்தவனாய் எழுவதற்குள் அவன் தலையில் ஓங்கி ஒரு அடி விழுந்தது. அதைச் சமாளித்துத் தனது உடைவாளை எடுப்பதற்குள் பத்துப் பதினைந்து பேர் அவனைச் சூழ்ந்து கொண்டு கட்டிப் பிடித்து விட்டனர்.