உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 கலைஞர் மு. கருணாநிதி தெரியாமல் பூட்டி வைத்திருக்கிறார்களாமே! அந்த நாச்சியாருக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ?" பெண்கள் சிலர், தங்களுக்குக் கிடைத்த வதந்தியை வைத்துக் கவலையை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். 'என்னதான் இரு நாட்டுக்கும் உறவு ஏற்பட்டாலும், பெரிய அம்பலக்காரர் வல்லத்தரையருக்கும், அவரது மைத்துனர் உறங்காப்புலிக்கும் ஏற்பட்ட அவமானத்தை வேறு எப்படித்தான் கழுவிக் கொள்ள முடியும்? இதுதான் சரியான பதிலடி!" என்று அந்தக் கூட்டத்தில் ஒரு பிரிவினர் கருத்து அறிவித்துக் கொண்டிருந்தனர். "இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் தப்பியோடிய ஆதப்பனைப் பின்தொடர்ந்து சென்று அவனுடன் வாட்போர் புரிந்து கைது செய்து வந்தது உறங்காப்புலிதானாம்! உறங்காப்புலியைப் போன்ற சுத்தவீரனைச் சுலபமாகப் பார்க்க முடியாது! அவர் இல்லாவிட்டால் பட்டமங்கலத்திற்குப் பெருமையே இல்லை! பெயருக்குத்தான் வைரமுத்தன் அம்பலக்காரரே தவிர உறங்காப்புலிதான் பட்டமங்கல நாட்டுக்கே உயிர்! அசைக்க முடியாத இரும்புத் தூண்!" உறங்காப்புலியின் பாழ் மண்டபத்து ஆட்கள், ஊர்ப் பொது மக்களைப் போலத் தங்களைப் பாவித்துக் கொண்டு இப்படிப் பிரச்சாரம் செய்தார்கள் அந்தக் கூட்டத்தில்! அந்தச் சமயத்தில் உறங்காப்புலியும் அவனுடன் சில ஆயுதம் தாங்கிய வீரர்களும் குதிரைகளில் அங்கு வந்து றங்கவே - அவனது ஆட்கள் "உறங்காப்புலியார் வாழ்க!" என முழக்கமிட்டனர். 'எங்கே, இன்னும் வரவில்லையா? சீக்கிரம் அழைத்து வாருங்கள் அந்தச் சிறு நரிக்குட்டியை!"