உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இ இருண்டு கிடந்த கல்யாணியின் அறைக்குள் வைரமுத்தன் கையில் எடுத்து வந்த தீப்பந்த வெளிச்சம் பரவியது. அவனது கண்கள் முதலில் அங்குள்ள கட்டில் மீதுதான் தாவின. அதில் கல்யாணி இல்லை. சந்தேகத்தில் தான் எடுத்த எடுப்பில் கட்டிலைப் பார்த்தான். அவள் இல்லையென்றதும் தீப்பந்த்ததை உயர்த்திப் பிடித்து உத்திரத்தை நோக்கினான். அவன் நினைத்தவாறு எதுவும் நடக்கவில்லை. கதவுகள் உடைந்து விழுந்ததும் அவன் வேகமாக உள்ளே நுழைந்து வந்தபோது அவன் கடந்து வந்த ஒரு மூலை யிலேயே அந்த அறைக்குள் கல்யாணி நின்று கொண்டிருந்ததை அவன் கடைசியாகத்தான் பார்த்தான். இவ்வளவு அமளிக்கும் ஆடாமல் அசையாமல் எவ்வளவு நெஞ்சு அழுத்தத்துடன் நின்று கொண்டிருக்கிறாள் என்று வியப்படைந்த வைரமுத்தன், அவளருகே சென்று, "என்ன கல்யாணி இதெல்லாம்? எவ்வளவு நேரமாகக் கதவைத் தட்டுகிறேன்; என்னவென்று கேட்கக் கூடாதா?" என்று கடுமையைக் கால் பாகமும் கனிவை முக்கால் பாகமும் கலந்து கேட்டான்.