உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 373 'உங்களை இந்த இரவு நேரத்தில் யார் உள்ளே வரச் சொன்னது? அதுவும் எவ்வளவு நாகரிகமாக வந்திருக்கிறீர்கள்?" கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு அவள் அளித்த பதில் களீர் சவுக்கடிகளாய் வலித்தன அவனுக்கு! அந்த வலியையும் பொருட் படுத்தாமல் அவன் அவளிடம் பேசினான். "மனைவியிடம் கணவன் வருவதற்குக்கூட நேரம், காலம், அனுமதி இத்தனை விதி முறைகளும் இருக்கிறதா? வெளியூர் சென்ற கணவன் இன்னும் வரவில்லையே என்று மனைவியல்லவா கால் கடுக்க வாசலில் நின்று காத்துக் கொண்டிருக்க வேண்டும்!" மகள்! "என் பெற்றோருக்கு நான் அண்ணன்களுக்குத் தங்கை! உங்களுக்கு மனைவி! முதலிரண்டு உறவுகளும் பாசம் நிறைந்தவை! மூன்றாவது உறவு மோசம் நிறைந்தது! அதனால் நான் எடுத்த முடிவில் மாற்றமில்லை-தயவு செய்து இங்கிருந்து போய் விடுங்கள்! கல்யாணி, எதையும் தீர விசாரித்து அறிவதிலே தான் தெளிவு ஏற்பட முடியும். அதற்கேற்ற பொறுமை உன்னிடத்திலே கிடையாது என்பதுதான் எனக்குள்ள கவலை!" "நான் மிகத் தெளிவாகவே இருக்கிறேன். தெளிந்த பிறகுதான் திடமான தீர்மானத்திற்கே வந்தேன். இனிமேல் உங்களிடம் எதை நான் தீர விசாரிக்க வேண்டியிருக்கிறது? காதல் என்ற புனிதமான சொல்லைப் பயன்படுத்திப் பரம்பரைப் பகையைத் தீர்த்துக் கொள்ளவும். பழிக்குப்பழி வாங்கவும் திட்டம் தீட்டிய உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன். மிகவும் நன்றி; போய் வாருங்கள்!"