உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 கலைஞர் மு. கருணாநிதி 'ஆதப்பனை இங்கு அவமானப்படுத்திட நடந்த முயற்சிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை, கல்யாணி! அப்படியிருந்தால் அவனை அக்னியூவிடமிருந்து விடுவித்துக் கொண்டு வந்திருப்பேனாடிய "பாரதம் படித்திருக்கிறேன் நான்! பரமாத்மா கிருஷ்ணனுக்கு நவரத்தின சிம்மாசனம் போட்டு உட்கார வைத்து, அவனைப் படுகுழியில் தள்ளிக் கொன்று விடச் சதி செய்தான் சகுனி என்பது அந்தக் கதை! அங்கே கண்ணனுக்குச் சிம்மாசனம்! இங்கே என் அண்ணனுக்கு விடுதலை! சகுனிக்கும் உங்களுக்கும் நோக்கம் ஒன்றேதான்!" 'என்னைச் சகுனியோடு ஒப்பிடுகிறாயா-சபாஷ்! என் மனைவியிடமிருந்து இப்படியொரு விருது பெறுவது எனக்கு மகிழ்ச்சியேதான்!* சகுனிகூடச் சூதுவலை பின்னுவதில்தான் பின்னியதாக சமர்த்தன்! அவன் மாதுவலை மகாபாரதத்தில் நான் படிக்கவில்லை!" 'கல்யாணி! நீ மனத்தில் எவ்வளவு புகைச்சலை வைத்துக் கொண்டு பேசுகிறாய் என்பது எனக்குப் புரிகிறது!" "கொழுந்துவிட்டு எரிவதற்கு முன்பும் புகைச்சல் தோன்றும் எல்லாம் எரிந்து முடிந்து அடங்கி அணைந்துவிட்ட பிறகும் புகைந்து கொண்டிருக்கும்! அதில் இரண்டாவது நிலை என் நிலை! கல்யாணி எப்போதோ இறந்து போய்விட்டாள். இப்போது நீங்கள் அவள் கல்லறைக்கு முன்னால் முன்னால் நின்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! உள்ளே வந்ததும் கட்டிலைப் பார்த்தீர்கள்-உத்திரத்தை உற்று நோக்கினீர்கள். ஏன் என்று எனக்குத் தெரியும்! பைத்தியக்காரி தற்கொலை செய்துகொண்டு பழியை நம்மீது போட்டு விடுவாளோ