உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 387 இன்பங்கள்! அத்தனையும் கவைத்திடக் கொடுத்து வைக்க வேண்டுமடி என் கோகிலமோர் மீண்டும் தழுவிடத் தாவினான். அவள் ஓடினாள். மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்... கல்யாணி அவன் கையில் சிக்கவில்லை! அவனும் அவளைச் சீரழிக்காமல் விடுவதில்லையென்று துரத்தினான்! அந்த மண்டபம் அதிர்ந்தது) பாகனேரியில் ஆதப்பனை அந்த நடுநிசி நேரத்தில் அவசர காரியம் என்று தூக்கத்திலிருந்து எழுப்பச் சொல்லி, வீரம்மாள் கொடுத்த மடலைப் பட்டமங்கலத்து வீரன் கொடுத்தான். 'தம்பி ஆதப்பனுக்கு வீரம்மாள் எழுதும் அவசர மடல்: மனத்தாங்கலின் காரணமாகக் கல்யாணி பாகனேரிக்குப் புறப்பட்டு வருகிறாள். என் கணவர் உறங்காப்புலியைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே, அவரைத்தான் கல்யாணிக்குத் துணையாக அனுப்பியிருக் கிறான் வைரமுத்தன் வழியில் எதுவும் கல்யாணிக்கு ஆபத்து நேரக்கூடும்! உடனே ஆவன செய்யவும்!" மடலைப் படித்துவிட்டு ஆதப்பன் கொந்தளித்தான்! அண்ணன் வாளுக்குவேலியை எழுப்பிக் கடிதத்தைக் காட்டினான்! தங்கைக்கு ஒரு சிறு தீங்கு என்ற றாலும். ஊழித்தீயாக மாறுவேன் என்று சூளுரைத்த அண்ணன் அல்லவா? குதிரைகள் இரண்டு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. தம்பி! நீ குறுக்கு வழியாகப் போ! நான் சாலைப் பாதையில் போகிறேன்" ஆதப்பனுக்கு ஆணையிட்டுவிட்டுக் குதிரையின் விலாப்புறத்தில் இரு கால்களாலும் உதைத்தான். குதிரை நாலு கால் பாய்ச்சலில் புறப்பட்டது. அவ்வாறே ஆதப்பன் குதிரையும் இறக்கை கட்டியது போல் பறந்தது.