உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 கலைஞர் மு. கருணாநிதி உரிய நேரத்தில் கடிதம் போய்ச் சேர்ந்ததோ இல்லையோ என்ற சந்தேகம் வீரம்மாளுக்கு! வண்டிக்காரனை இறக்கி விட்டு விட்டு உறங்காப்புலி வண்டியோட்டத் தொடங்கிய காட்சியே அவள் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது. தனது கணவனின் லீலா விநோதக் கூடத்தில் எந்த அசம்பாவிதமாவது கல்யாணிக்கு நடந்து விட்டால் என்ன செய்வது என் பதைப்பு வீரம்மாளை நிலை கொள்ளச் செய்யாமல் ஆக்கியது. அதனால் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அந்த மண்டபத்தை நோக்கி அவளும் புறப்பட்டாள். கல்யாணியைக் காப்பாற்ற எத்தனைத் துணைகள்! சாலை வழியாகப் பெரிய அண்ணன்! குறுக்குப் பாதையிலே சின்ன அண்ணன்/ மண்டபத்தை நோக்கி அவளது அண்ணி வீரம்மாள்! உறங்காப்புலி, மது அருந்திய வெறியிலும், கல்யாணியைக் கசக்கி எறிய வேண்டுமென்ற வெறியிலும், களைப்பில்லாமல் அவளைத் துரத்தினான். என்ன இருந்தாலும் பெண்தானே! ஓட முடியாமல் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு வதங்கித் தொங்கும் கொடிபோல் ஆனாள்!" அகப்பட்டுக் கொண்டாயா? என்று அவளை அணைக்கப் போன உறங்காப்புலியை வேகமாக இழுத்துக் கீழே தள்ளிவிட்டு, "சே, நீங்கள் ஒரு மனிதனா?" என்று கத்தினாள் வீரம்மாள்! தள்ளப்பட்ட வேகத்தில் உறங்காப்புலியின் தலை ஒரு கல்லில் மோதி மயங்கி விழுந்துவிட்டான். வீரம்மாள் உட்பட அவனைக் கவனிக்க அனைவரும் சூழ்ந்துகொண்ட நேரம் பார்த்துக் கல்யாணி அங்கிருந்து தப்பி ஓடத் தொடங்கினாள். அவளை யாரும் பார்க்கவில்லை. ஓடிப் போய்-இருட்டில் மறைந்து விட்டாள் கல்யாணி. வாளுக்குவேலி பட்டமங்கலம் சாலையில் குதிரையில் வந்து கொண்டிருந்தபோது அவனுக்கு எதிரே