உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 389 பட்டமங்கலத்துப் பெட்டிவண்டி வருவதைப்பார்த்து விட்டான். கல்யாணிதான் என்ற முடிவுடன் குதிரையில் இருந்து கீழே குதித்துக் "கல்யாணி/ கல்யாணி!" என்று கூப்பிட்டுக் கொண்டே வண்டியின் பின்புறம் வந்தான். ஒரு கையில் தீப்பந்தத்தை வைத்துக் கொண்டு, இன்னொரு கையால் வண்டியின் திரைச்சீலையை நகர்த்தினான். வண்டிக்குள் அவன் கண்ட காட்சி! அய்யகோ! கல்யாணியின் தாலியைக் கழுத்தில் கட்டிக் கொண்டு ஒரு சொறிநாய் நின்று கொண்டிருந்தது. வாளுக்கு வேலி அந்த நாயை வெறிக்கப் பார்த்தான். நாயின் கழுத்திலிருந்த தாலியைத் தீப்பந்த ஒளியில் உற்றுப் பார்த்தான். கல்யாணியின் தாலி" என்று ஒரு சீட்டு எழுதப் பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. கல்யாணீ" என்று அவன் கத்தியது அந்தப் பாதையிலிருந்த பாறைகளையும் மரங்களையும் பூகம்பம் உலுக்கியது போல் உலுக்கியது! நாயின் கழுத்தில் இருந்த தாலியைப் பறித்து எடுத்துக் கொண்டான். “எங்கேயடா என் கல்யாணி?" என்று வண்டியோட்டிய வீரனைக் கேட்டு, அவன் பதில் சொல்வதற்குள் அவனைத் தூக்கிச் சுழற்றி அங்குள்ள ஒரு பாறையில் அவன் உடலைச் சிதறு தேங்காய் போல உடைத்தான். வண்டியிலிருந்த நாய் அடிதாங்காமல் ஓடிற்று ஊளையிட்டுக் கொண்டே! மாடுகளை அவிழ்த்துத் துரத்தினான். பட்டமங்கலம் வண்டியைத் தீயிட்டுக் கொளுத்தினான். அந்த நெருப்பு ஜுவாலையில் 'கல்யாணி! கல்யாணி!"" என்று அவன் கத்தியது. அவளே தணற் பிழம்பாக ஆகிவிட்டதாகத் தோன்றியது. 康康