உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 405 ஆசைக் கொடியில் மலர்ந்திருந்த அற்புதமான கற்பனைப் பூக்கள் எல்லாம் சுருகி உதிர்ந்துவிட்டன" என்று கூறிய சுந்தராம்பாள் பெருமூச்சு விட்டுக் கொண்டே ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்தாள். கல்யாணிக்கு அப்போதுகூட மனதிலே ஒரு ஆவல்! வடிவுக்கும் வைரமுத்தனுக்கும் தொடர்பு உண்டா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல்! 'வீட்டை விட்டே போடி" என்று விரட்டி விட்டான்! வெளியில் சொல்ல முடியாத வெட்கக்கேடான சேட்டைகளையெல்லாம் சமாளித்து உறங்காப்புலியிட மிருந்து தப்பித்து வந்திருக்கிறாள். இத்தனைக்கும் காரணம் கணவன் வைரமுத்தன்தான் என்பது அவள் எண்ணம். இருந்த போதிலும் அவனுக்கும் வடிவுக்கும் தொடர்பு உண்டா என்பதை அறிந்து கொள்வதிலே ஒரு ஆர்வம்! இயல்பாகப் பெண்களுக்குரிய ஆர்வம்! "அவருக்கும் வடிவுக்கும் ஏற்பட்ட உறவில் ஏதாவது திடீரென்று அதிர்ச்சி தரத்தக்க நிகழ்ச்சி ஏற்பட்டு, அதனால் இருதயம் வெடித்து... என்று கல்யாணி, சுந்தரியிடம் சந்தேகம் கேட்பது போலக் கேட்டாள்! "வடிவுக்கும் வைரமுத்தனுக்கும் உறவே ஏற்படவில்லையே! ஏதோ உன் மீதுள்ள கோபத்தில் வடிவு வீட்டுக்குச் சீர்வரிசைகள் அனுப்பி உள்னை மிரட்டினாரே தவிர அவர் வடிவாம்பாள் வீட்டுக்கு வரவே இல்லையே; உன் பெரிய அண்ணாவும் நானும் என் வீட்டில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது செய்தி வந்தது. வடிவு நெஞ்சு வலியால் துடிக்கிறாள் என்று! நாங்கள் ஓடிப் போய்ப் பார்ப்பதற்குள் வடிவு எங்களை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டாள்!..." இட்டுக் கட்டிய கதைதான் சொல்லுகிறோம் என்று உணர்ந்தேதான் கல்யாணியிடம் சுந்தரி வடிவின்