உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 கலைஞர் மு. கருணாநிதி மரணத்திற்குக் காரணத்தைச் சொன்னாள். வைரமுத்தன் தான் வடிவைக் கொன்றான் எனக் கூறி அவனைப் பற்றிய ஒரு விகார வடிவத்தைக் கல்யாணியின் நெஞ்சில் தீட்டுவானேன் என்று சுந்தரியைப் போன்ற ஒரு உத்தமமான பெண் நினைப்பது நியாயந்தானே! கல்யாணி நாச்சியாரின் வாழ்வில் படிந்துள்ள சோகமெனும் தூசுப்படலம் அகற்றப்பட வேண்டுமென்பதில் சுந்தரி இன்னும் அக்கறை கொண்டவளாகவே இருந்தாள். இருவரும் துன்பத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த பொழுது வாளுக்கு வேலியும் அங்கு வந்து சேர்ந்தான். சுந்தரியும் கல்யாணியும் எழுந்து நின்றார்கள். "கல்யாணிக்கு ஆறுதல்தான் கூற முடியுமே தவிர, இனி என் கல்யாணிக்கு வாழ்வளிக்க முடியாது சுந்தரி! இப்படியொரு முடிவு ஏற்பட்டுவிட்ட பிறகு இந்தக் கொடுமையான தீர்ப்பை. வாள்முனையை எழுத்தாணியாகக் கொண்டு, போர்முனையில் சிந்தும் இரத்தத் துளிகளால் எழுத முடியுமே தவிர, வேறு மார்க்கமிருப்பதாக எனக்கு தெரியவில்லை!" என்றான் கம்பீரமான குரலில் வாளுக்குவேலி! 'அண்ணா! என் பொருட்டு ஒரு போராட்டமா? என் துயரம் என்னோடு முடியட்டும் அண்ணா! பாகனேரி, பட்டமங்கலம் மக்களுக்கு என்னால் எள் முனையளவு துயரமும் ஏற்பட வேண்டாம் அண்ணா! அழுதாள் கல்யாணி! அதையும் யோசிக்கத்தானே வேண்டும்! கள்ளர் நாடுகள் களம் அமைப்பதால் வெள்ளையர் கூட்டத்துக்குத் தானே கொண்டாட்டம்! போராட்டத்தைத் தள்ளிப் போட்டுவிட்டு, வெள்ளை அய்யர் போன்ற யாராவது ஒருவரை விட்டு பட்டமங்கலத்தாருடன் பேசிப் பார்க்கச்