உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 கலைஞர் மு. கருணாநிதி சுந்தரி மட்டுமென்ன, இதயமற்றவளா? தன்னைப் போல ஒரு பெண் தணலில் விழுந்த தளிராக வதங்கிக் கிடக்கும்போது இதுவரையில் தணியாத தனது விரகதாபத்தைத் தணித்துக் கொள்ள இப்போதுதான் வேளை வந்தது என்று ஒடிவருவாளா என்ன? உடலைப் பிணைத்துச் சூடேற்றும் இன்ப உறவுக்காக அல்ல; தன் மனத்தைப் பறி கொடுத்துவிட்ட நாள் முதல் வாளுக்கு வேலியையே அவள் தனது கணவனாக வரித்துக் கொண்டிருக்கிறாள். அவனுடன் பேசிக் கொண்டிருப்பது அவனுக்குப் பணிவிடைகள் செய்வது-அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது-அவனுக்கு மகிழ்ச்சியென்றால் தானும் மகிழ்வது-துயரமென்றால், தானும் துவண்டு போவது. இப்படியே தனது வாழ்க்கை முழுமையும் கழிக்க அவன் தீர்க்காயுசுடன் இருந்தால் போதுமானது! அதைத் தவிர அவனிடம் உடற்சுகம் அனுபவிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிடவில்லை அவள்! ஆரம்ப காலத்தில் அரும்பிய காதல் அப்படித்தான் மலராகக் குலுங்கியது! ஆனால் அந்த மலர் மணம் வீசுவதற்குள் எத்தனையோ இடையூறுகள்! அதனால் அவள் அந்த எண்ணத்தையே விட்டுவிட்டாள். உடற்பசிக்கு எந்த மதிப்பும் அளிக்காமல் சொல்லப்போனால் அப்படி ஒரு பசியே தோன்றாத நிலைக்குத் தன்னை மாற்றிக் கொண்டு உள்ளத்தில் அவனை வைத்துக் கொஞ்சிக் குலவினாள். ஆடல் அரங்கில் சந்தித்த போது இருவரும் ஒருவருக்கொருவர் சீற்றங்காட்டிப் பிரிந்தனர். திருக்கோட்டியூர் ஆலயத்தில் சந்தித்த்போதோ கலைக் கடலில் காதல் அமுதம் பொங்கியது. சுந்தரி வீட்டில் முதல் சந்திப்பில் கல்யாணியின் திருமணம் முடியுமட்டும் இல்லையென்ற கட்டுப்பாடு வாளுக்கு உடலுறவு