உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 419 வேலிக்குக் குறுக்கே நின்றது. கல்யாணியின் திருமணம் முடித்த பிறகு அடுத்த சந்திப்பில் இருவருமே ஒருவராய் உள்ளத்தில் மட்டுமன்றி உடலாலும் ஒட்டிக் கொள்ளும் வேளையில்தான் கறுத்த ஆதப்பன் கைது செய்யப்படக் கூடுமென்ற செய்தி வந்து சேர்ந்தது. இப்படித் குட்டிக்கொண்டே போய்விட்ட உடலுறவை இனி வலியச் சென்று வற்புறுத்தி அழைப்பதில்லையென்று மனப்பக்கு வத்துடன்தான் சுந்தராம்பாள் பாகனேரி மாளிகையின் மூத்த மருமகளாகத் தன்னைத் தானே நினைத்துக் கொண்டாள். வாளுக்கு வேலியின் புஜங்களை அழுத்திப் பிடித்தவாறு அவனது அகன்ற மார்பில் தனது தலையைச் சாய்த்துக் கொண்டாள். என்ன இருந்தாலும் ஆண்மகன் தானே! சுந்தரியின் மேனி ஸ்பரிசத்தால் அவன் தேக்கு மரத் தேகத்தில் வெப்பம் பரவியது. தனது கையை அவளது முதுகில் வைத்து மெல்லத் தடவிக் கொடுத்தான். அவன் உடம்பு தகிப்பதைச் சுந்தரி உணர்ந்து கொண்டாள். அதற்கு மேல் அவனைச் சோதனைக்கு ஆளாக்க அவள் விரும்பவில்லை. தலையை அவன் மார்பிலிருந்து எடுத்துக்கொண்டு "தூங்குங்கள்” என்று அவனது புருவங்களைத் தனது விரல்களால் மென்மையாகத் தடவினாள். வாளுக்குவேலி, அவள் தலையைத் தன் முகத்தருகே இழுத்து, அந்தச் சிவந்த இதழ்களில் முத்தமிட உதடுகளைக் குவித்தான். ஆனால் சுந்தரி, அதற்கு இடம் தராமல் தன்னை விடுவித்துக் கொண்டு “என்ன? மனத்தைக் கல்லாக்கிக் கொண்டீர்க்ளா? தங்கச்சிலை கல்யாணி, தாலி கட்டியவன் இருந்தும் தாலியற்று இந்த மாளிகையில் வெந்து கொண்டிருப்பது நினைவில்லையா?" எனக் கேட்டவாறு எழுந்தாள்!