உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 கலைஞர் மு. கருணாநிதி “என்னை மன்னித்துவிடு சுந்தரி/ நாளைக்குப் போர்க் களத்திலிருந்து திரும்பி வருவேனோ இல்லையோ- அதற்குள் உனக்கு இந்தக் குறையை வைக்கக்கூடாது என்றுதான்!" தழுகழுத்தான் வீரன் வாளுக்குவேலி! அதிர்ந்து போனாள் சுந்தரி! பாய்ந்து சென்று அவன் வாயைப் பொத்திக் கொண்டு "அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்! ஆண்டவன் நம்மைப் பிரிக்கவே மாட்டான்? நாளை வெற்றி உங்களுக்குத்தான்!" எனக் கண் கலங்கக் கூறினாள். அவன். நாளை வெற்றி நமக்கு என்று கூறு சுந்தரி!" என்றான் 'நமது வெற்றிக்காகப் பில்லாத்தா கோயிலில் சென்று நாளைக் காலை முதல் நானும் கல்யாணியும் பிரார்த்தனை செய்யப் போகிறோம்" எனக் கூறிவிட்டுச் சுந்தரி படுத்திருந்த வாளுக்கு வேலியின் பாதங்களில் முத்தமிட்டுவிட்டு அவைகளைக் கண்களிலும் ஒத்திக் கொண்டுவிட்டு அந்த அறையை விட்டு அகன்றாள். சுந்தரியின் துல்லியமான தூய நெஞ்சத்தை எண்ணியவாறு வாளுக்குவேலி, விழிகளை அந்த அறையின் சுவர்களில் சுழலவிட்டுக் கொண்டு படுத்திருந்தான். சுழன்று கொண்டிருந்த விழிகள் ஒரு ஓவியத்தின் மீது நிலைத்து நின்றுவிட்டன. மங்கலான வெளிச்சத்தில் அவன் அந்த ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். புலியும் மானும் ஒரே துறையில் அருகருகே நின்று அருவியிலே தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கின்றன. மிகைப்படுத்தப்பட்ட கற்பனையென்று தான் இது நாள் வரையில் அந்த ஓவியத்தைக் காணும்போதெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தான்.