உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 கலைஞர் மு. கருணாநிதி சொன்னார்! பாகனேரி, பட்டமங்கலம் இரண்டையும் ஒரே அடியாக அதம் செய்துவிட்டு நீங்கள் அம்பலக்காரர் ஆவதற்கான திட்டம் எந்த அளவில் இருக்கிறது என்ற விபரமும் கேட்டுவரச் சொன்னார்!" இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் வீரம்மாள் தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் "அடப் பாவிகளா!" என்று கூற வாயைத் திறந்தாள். ஆனால் அதற்குள் காரியத்தைக் கெடுத்து விடக்கூடாது. மிச்சமுள்ள சதித் திட்டத்தையும் அறிய வேண்டுமென்று எதுவும் வாய்திறந்து சொல்லாமலே கஷ்டப்பட்டு ஒரு கனைப்போடு நிறுத்திக் கொண்டு தொடர்ந்து தூங்குவது போலவே பாசாங்கு செய்தாள். னி அவள் தூங்கினாலுங்கூட அவளுக்கருகே எதுவும் பேசுவது நல்லதல்ல என உணர்ந்த உறங்காப்புலி, ஆங்கிலேய அதிகாரியை அழைத்துக்கொண்டு மெதுவாக நடந்து பாசறைக்கு வெளியே சென்றான். அதிகாரி கொண்டுவந்த பெட்டி மட்டும் உறங்காப்புலியின் படுக்கையின் மீது கிடந்தது. பாசறைக்குப் பின்புறமுள்ள ஒரு பெரிய மரத்தடியில் உறங்காப்புலி ஆங்கிலேய அதிகாரியை உட்கார வைத்துவிட்டுத் தானும் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டான். வீரம்மாள், எழுந்துவந்து பெட்டியைத் திறந்து பார்த்தாள். பளபளக்கும் பவுன் நாணயங்கள். அதில் பத்து நாணயங்களை எடுத்துப் பாசறைக் காவலனிடம் கொடுத்துவிட்டு, 'வாயைத் திறக்கக் கூடாது எனக் கூறிவிட்டுப் பெட்டியில் மிச்சமுள்ள பஷன்களுடன் வெளியே வந்து, உறங்காப்புலியும் ஆங்கிலேயே அதிகாரியும் இரகசியம் பேசிக்கொண்டிருக்கும் மரத்துக்குப் பின்னால் மறைந்திருந்து ஒட்டுக் கேட்டாள்.