உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 443 அவசர அவசரமாகக் கல்யாணி அந்த மடலை உறையிலிருந்து எடுத்துப் படித்தாள். அவள் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அன்பு மனைவி கல்யாணிக்கு! நான் இப்படி அழைக்கிறேனே என்று தொடக்கத்திலேயே கடிதத்தைத் தூக்கி எறிந்துவிடாதே! ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் சூழ்நிலைகளின் உறங்காப்புலியின் காரணமாகவும் சூழ்ச்சியின் காரணமாகவும் எத்தனையோ தவறுகள் நடந்து விட்டன. "பழிவாங்கும் எண்ணத்தை விட்டுவிட்டு, நம் வீட்டுப் படியை மிதித்த கல்யாணியைப் பாசத்துடன் நடத்துக என்று எனக்குப் பண்பாடு போதித்த அன்பு அக்காளை என் எதிரிலேயே உறங்காப்புலி கொன்று விட்டான். அவனையும் அக்கணமே தீர்த்துக் கட்டிவிட்டேன். "அக்னியூவிடமிருந்து நான் விடுவித்து அழைத்து வந்த ஆதப்பனை அவமானப்படுத்த முயற்சி செய்தது உறங்காப்புலி! அதைத் தடுத்து நிறுத்தச் சென்றவன்தான் நான்! ஆனால் நீ என்னை நம்பவில்லை! அந்த வெறுப்புத் தீயை மேலும் வளர்க்கவோ என்னவோ என்னை வடிவாம்பாள் வீட்டுக்கு அனுப்பத் திட்டம் தீட்டியதும் உறங்காப்புலிதான்! "சூழ்நிலை என் நெஞ்சையும் நிலைகுலைத்தது! அதன் விளைவு என் வாழ்விலே பெருங் களங்கம்! நெருங்கக் கூடவில்வை வடிவாம்பாளை நான்! ஆனால் நீயோ உன்னை இனி நெருங்கக்கூடாது என்று எனக்கு ஆணை பிறப்பித்து விட்டாய்! அதுவும் சூழ்நிலைதான்! "பிறந்த வீட்டுக்குப் போ என்று உன்னை இந்தப் பித்தன் அனுப்பினேன்; துணைக்கு ஒரு எத்தனைச்