உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 சேர்த்துவிட்டு! அவன் கலைஞர் மு. கருணாநிதி பாழ்மண்டபத்தில் உன் வாழ்வையே பாழாக்க முனைந்தான் என்பதையும், நான் உனக்குக் கட்டிய தாலியை நாயின் கழுத்தில் கட்டி அனுப்பினான் என்பதையும் என் அக்காள் வீரம்மாள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். "ஒரு தங்கைக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமையை எந்த அண்ணனால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? தங்கை சூர்ப்பனகைக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைத் தாங்க மாட்டாமல்தானே இராவணன் சீறி எழுந்தான். இராமாயணப் போராட்டமே நடைபெற்றது! நீ இந்த மடலைப் படிக்கும்போது நான் போர்க்களத்தில் இருப்பேன். ஒருவேளை வீர மரணம் எய்தியும் இருக்கக் கூடும். 'கல்யாணி! நான் குருதி வழிப் பொட்டலில் வெற்றியை விரும்பவில்லை விழுப்புண்ணுடன் கூடிய மரணத்தையே விரும்புகிறேன். வெற்றியை விரும்பாமைக்குக் காரணம் கேட்கிறாயா? நான் வெற்றி பெற்ற பிறகும் என் கல்யாணியின் அன்பைப் பெற முடியாது! ஏனென்றால் கல்யாணியின் அண்ணன் மார்களைக் கொன்றுவிட்டு அல்லது காயப்படுத்திக் கைது செய்து விட்டுத்தானே பட்டமங்கலத்து வெற்றிக் கொடி பறக்க முடியும்? அதன் பிறகு நீ என்னை ஏறெடுத்துப் பார்ப்பாயா? "எனக்கென்று யாருமில்லை. வளர்த்து ஆளாக்கிய அண்ணன் வல்லத்தரையரை இழந்தேன்; பாவி உறங்காப்புலியின் பகை வளர்க்கும் சதியால்/ வாஞ்சையுடன் என்னைப் போற்றிப் பாதுகர்த்த சகோதரியை இழந்தேன்; இதய பூர்வமாக நான் காதலித்த ஏந்திழையாள் என் கல்யாணியும் என்னருகே இல்லை! இனி நான் யாருக்காக அல்லது எதற்காக வாழ வேண்டும்?