உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கலைஞர் மு. கருணாநிதி செய்தால் என்ன? எழுபத்து எட்டு வயதுத் தாயார் இறந்து போனால் இடுகாடெல்லாம் எலும்பாகவா போய்விடும்" “என்ன சொன்னாய் " வாளுக்குவேலியின் கைகள் அந்தக் குடிகார வாலிபனின் கன்னத்தில் பயங்கரமாக விளையாடி விட்டன. மகனைப் பற்றிக் குறை கூற வந்த அந்தக் கிழத்தாய், அம்பலக்காரரின் கால்களில் விழுந்து "அய்யோ! அவனை விட்டு விடுங்கள்!" என்று கூக்குரலிட்டாள்! தாய்மை அங்கே கொடிகட்டிப் பறந்தது. 'அவருக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். அத்தானை ஒண்ணும் செய்யாதீங்க" என்று குறுக்கே பாய்ந்து கணவனைக் கட்டிக்கொண்டு விம்மியழுதாள் அந்தப் பெண்மணி! கழுத்தில் தாலியில்லாவிட்டாலும் - அதைக் கழற்றி விற்றவன் கணவன் தானே என்ற ஆறுதலுடன்; பெண்மை அங்கே பேரரணாக நின்று பாதுகாத்தது! பெற்ற தாயும் உற்ற தாரமும், தன் மீது தூசு படவும் சகிக்கமாட்டார்கள் என்பதை அந்தக் குடி மயக்கத்திலும் புரிந்து கொள்கிற அளவுக்கு வாளுக்கு வேலி கொடுத்த அடி உதவிற்று போலும்! மயக்கம் தெளிந்தவனாக ஒருகணமும் தயக்கமின்றிக் காலில் விழுந்து 'அம்மா! என்னை மன்னித்துவிடு! என்று அலறினான். மனைவியின் கரங்களைப் பற்றிக் கொண்டு 'என்னை நம்பு! இனி இந்தத் தவறு செய்யவே மாட்டேன்" என்று கெஞ்சினான். வாளுக்குவேலியின் பாதங்களைப் பற்றிக் கொண்டு அவற்றைத் தன் கண்ணீரில் நனைத்தான்! குமுறிக்