உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் வ.சுப. மாணிக்கம் பாராட்டு! இந்த நூலைப் படிக்க ஆரம்பித்த எனக்கு 10-வது பக்கத்திலேயே மெய் சிலிர்த்தது (சிலரது நூலில் அட்டையைப் பார்த்தால் தான் மெய் சிலிர்க்கும்). கலைஞர் எழுதும்போது 'இது நாட்டார் அய்யா எழுதிய கள்ளர் சரித்திரத்தை அடிப்படையாக வைத்து எழுதியது' என்று குறிப்பிட்டதைப் பார்க்கும்போது. என் ஆசிரியரின் நூலை வைத்து எழுதியிருக்கிறார் என அறிந்துதான் மெய்சிலிர்த்தது. எல்லோரும் மேல்நாட்டார் எழுதியதை அடிப்படையாக வைத்து எழுதியதாகத்தான் குறிப்பிடுவார்கள். எவ்வளவு இனப்பிரிவுகள் இருந்தாலும், வகுப்புப் பிரிவாக இருந்தாலும், தமிழினம் ஒற்றுமையாக வாழ வேண்டும்: பிரிவுகள் நம்மை வேற்றுமைப் படுத்தக்கூடாதென்ற பின்னணியிலே கலைஞர் எழுதியிருக்கிறார். தென்பாண்டிச் சிங்கம் எனும் இந்த நூல் இந்தியாவிலும், தமிழகத்திலும் பெரும்புகழ் வாய்ந்து. இன்னும் பல புகழை அடையவிருக்கிற கலைஞர் அவர்கள் தன் அரசியல் அனுபவம் முழுவதையும் கொட்டி எழுதிய நூல். தமிழகத்தின் எதிர்காலம் இருளாகப் போய்விடக் கூடாது என்று எண்ணி இத்தகையதொரு நூலைத் தமிழகத்திற்கு ஒருபெரும் சொத்தாக எழுதி வைத்திருக்கிறார். இந்தக் குறிக்கோளை அவருடைய காலத்திலேயே பார்க்கும் படியான ஒரு வாய்ப்பு இந்தத் தமிழகத்திற்கு வரும் என்று நான் கருதுகிறேன். நாட்டார் அய்யாவின் குறிக்கோள் கலைஞரான, நம்மவரால் நிறைவேறுகிறது.