உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 79 "உயர்ந்த ரக மதுபானங்கள் இருக்கின்றன! என்ன பிடிக்கும்? கொண்டு வரச் சொல்கிறேன்!" சுர்னல் துரையின் இந்தக் கேள்விக்கு, "அதெல்லாம் பழக்கமில்வை வேண்டாம்!" என்று மறுத்தான் வாளுக்குவேலி! "ஓ! வல்லத்தரையனும் வேண்டாமென்கிறார். நீரும் அப்படியே சொல்கிறீர்!" என்று கலகலவென ஒரு அர்த்தமற்ற சிரிப்பைக் கொட்டினான் வெள்ளை அதிகாரி! திருக்கோட்டியூரில் கர்னல் துரையின் ஆட்களை ஆதப்பன் அடித்து விரட்டியது குறித்துத் தனது ஆத்திரத்தைக் கொட்டத்தான் அழைத்திருப்பான் என்று நினைத்ததற்கு மாறாக நிலைமை இருப்பதை உணர்ந்து, தம்பியைப் பார்த்தான் வாளுக்குவேலி/ தம்பி ஆதப்பனின் கண்களோ அண்ணனைப் பார்க்காமல் அந்தக் கூடாரத்தில் ஒரு பகுதியில் மாட்டப்பட்டிருந்த ஒரு வண்ண ஓவியத்தையே மை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு புளிய மரம்! அந்த மரத்தின் கீழே முக்காலி! முக்காலிக்குக் கீழேயுள்ள வெள்ளைப் பகுதியில் கயத்தாறு" என்ற எழுத்துக்கள்! முக்காலியின் மீது கட்டபொம்மன்! அவன் கழுத்திலே தூக்குக் கயிறு! அதற்கடுத்து இன்னொரு வண்ண ஓவியம்! சிம்மாசனத்திலே சிரித்த முகத்துடன் எட்டப்பன்! அவன் தலையில் ஒரு ஆங்கிலேய அதிகாரி மகுடம் சூட்டுவது போன்ற காட்சி! அந்த ஓவியங்கள் புரியும் உபதேசம்தான் என்ன? ஆங்கிலேயர்க்கு அடங்கிப் போனால் ஆட்சி நிலைக்கும்! அடங்காவிட்டால் ஆவி பிரியும்/ கறுத்த ஆதப்பனின் உள்ளம் கனலாகத் தகித்தது.