உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கலைஞர் மு. கருணாநிதி எவ்வளவு ஆணவமும், அதிகாரக் கொழுப்பும் இருந்தால் கூடாரத்திலேயே இந்தப் படத்தை மாட்டி வைத்துக் குறுநில மன்னர்களையும், பாளையக்காரர் களையும் பரங்கி அதிகாரிகள் மிரட்டிக் கொண்டிருப் பார்கள்... அவர்களைச் சொல்லி என்ன பயன்? எப்படியும் வாழ வேண்டும், எந்தப் பதவியிலாவது ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்று வாயில் எச்சிலை வடிய விட்டுக்கொண்டு அலைகிற எட்டப்பர்களையல்லவா சொல்ல வேண்டும்! ஆதப்பனின் கண்களில் ஜுவாலை வீசியது! குமுறும் எரிமலையைப் போல அந்தக் கூடாரத்தில் உட்கார்ந்திருந்தான்! கர்னல் துரை வாளுக்கு வேலியைப் பார்த்துப் பேசத்தொடங்கினான். "பாகனேரியாரையும் பட்ட மங்கலத்தாரையும் ஒரு அத்யாவசியமான காரியத்திற்காக அழைத்திருக்கிறேன்." "பீடிகை பலமாக இருக்கிறது! என்ன காரியமோ?" "வியாபார நோக்கத்தோடுதான் உங்கள் நாட்டுக்கு வந்தோம்! ஆனால் எங்கள் அதிர்ஷ்டம் ஒரு சாம்ராஜ் யத்தையே உருவாக்குகிற அளவுக்குப் பெருகி வருகிறது! உங்களின் வீரம், துணிவு, தியாக உணர்வு, நாட்டுப்பற்று இவைகளில் எங்களுக்குத் துளியும் சந்தேகமில்லை! ஆனால் எங்களிடமிருக்கும் நவீனமான போர்க் கருவி களின் முன்னால் தாக்குப் பிடிக்க உங்களால் முடியாது! உங்கள் கண் எதிரிலேயே எத்தனை ராஜ்யங்கள் எங்கள் கொடிக்குத் தலை வணங்கியிருக்கின்றன என்பதும், தலைவணங்காதவர்கள் தலையை இழந்திருக்கிறார்கள் என்பதும் நீங்கள் அறியாத கணக்கல்லம் இறுமாப்புடன் சுருட்டுப் புகையை இழுத்து அங்கே மாட்டப்பட்டிருந்த கட்டபொம்மன், கட்டபொம்மன், எட்டப்பன் வியங்களின் மீது சுருள் சுருளாக விட்டான் அந்தப்