பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 தென்மொழி




நல்லாரும் போற்ற நடந்தாளே! நாணபிலாப்
பொல்லாருந் துற்றப் புறம்போனாள்! பூவையவட்
கெல்லாருஞ் சொல்வர் இழிவு. (6)


ஏட்டி!ஒ,ஓ என்சொற்றாய்? என்மகளை ஏதிலவன்
கூட்டியே குற்றான் குறைகண்டி! கோதையோ
பூட்டிமூ டாதவோர் புள். (7)


களையும் உறவினர்களை 'நல்ல உறவினர்கள்' என்றாள்.

நல் உறவினர்கள் தேடிக் கொணறும் அத் தெரிவையின் முகம் காண வேண்டியே இவ்வுயிர் நிற்கும் என்றபடி. இழிவு தாங்காது உயிர் விடாததற்குக் காரணம் தய்மையன்பே என்றுணர்த்தினள் என்க.

6) அன்று அவளைப் போற்றியது நல்லவர்களே, இன்று பொல்லாரும் தூற்றம்படி புறம் போனாள். அதனால் எல்லாரும் இழிவு கூறுகின்றனர் என்று கவல்கின்றாள். நல்லவை போற்றியதே பெருமை என்று கொண்டது, மகள் பெருமைக்கு உயர்வு கற்பித்தது. பொல்லாரும் தூற்றியது இழிவு என்றது, அவன் சிறுமைக்கு மிகவும் தாழ்வு காட்டியது. பொல்லாதவர் முன்பெல்லாம் தன்முன் நாணி வராதிருந்து, இன்று இழிவு வந்தபோது நாணமின்றித் தன் முன் வந்து, நாள் நாணும்படியாகத் தூற்றுகின்றதை-நாணமிலாப் பொல்லார்-என்று குறிக்கின்றான்.

7) இப்பாடல் மகடூஉ முன்னிலை.
தன் மகளை இழித்த ஓர் இளையானை எதிர்த்து நின்றது. ஏட்டி-ஏன்டி. வலித்தல் விகாரம்.

ஒ-ஓ சினங்கொண்டு இழிவு மறுத்தது. "என் மகளைப் பிறன் ஒருவன் கூட்டி ஏகினன் என்று குறை பேசுகின்றாய்; என் கோதை பூட்டி வைத்து மூடப்படாத ஒரு பறவை என்பதை அறி, என்றாள் என்பதாம். அவன் காக்கப்படாத பறவை ஆகலின் பறந்து போனாள் என்று விளக்கியும், அவ்வாறின்றி நீ பிறரால் காக்கப்பட்டு வருகின்மையால், போகாமல் இருக்கின்றாய் என்றுணர்த்தியும் கூறியவாறென்க. இது வந்த இழிவை எதிர்த்து இழிவு காட்டியார் மேல் இறப்பு சாற்றியது.

முடிப்பூட்டாத என்று வராது பூட்டி மூடாத என்றது தொடை முரண்.