பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்மொழி 23




விழிபிறந்த தின்சொல் விளைந்ததன் றேயோர்
பழிபிறந்த தென்றறியேன்; பாலொழுகு பேதைக்
கிழிபிறந்த தனறை;யிலை இன்று. (8)


பூத்தேடு தொல்லை புரிமோ,தேன் உண்பார்க்கு?
கூத்தாடு வாரறிமோ கூதிர்ப் பெருங்காற்று
நாத்துற்ற லுன்னுவளே நன்கு? (9)


தனித்துணை நம்பித் தடம்போனாள்; தாயென்
றெனைத்துணை எண்ணா திடர்செய்தாள்; எற்கோ
இனித்துணை யாகிற் றிழிவு. (10)


8) 'விழி பிறந்தது; இன் சொல் விளைந்தது; அன்றே ஒரு பழி பிறந்தது' என்று அறியேன்.-என்றது இவள் பெண்ணாகப் பிறந்த அன்றே எமக்கு இழிவும் பிறந்தது; அஃதவ்வாறாக 'நான் இன்று பிறந்ததுபோல் வருந்துதல் எற்றுக்கு' என்று இழிவு தேற்றினள் என்றவாறு. பாலொழுகு பேதை என்றது அவள் குழந்தைமைப் பருவத்தை நினைவு கூர்ந்து சொல்லியது
9) பூவைத் தேடித் தொல்லையுற்றுத் தேனீ சேர்த்த தேனை உண்பவர், அது பட்ட வருத்தத்தை அறிவாரோ?-கூதிர்ப் பெருங் காற்றால் குவிரெய்தித் துன்புறுவார் நிலையைக் கூத்தாடுவார் அறிவாரோ?-எடுத்துக்காட்டுவமை.
"இளமைத் தேனை உண்பவளாகிய தன் மகள் அவளைப் பெற்றுப் பேணிய தாயின் வருத்தம் அறிவாளோ? இழிவாகிய குளிர் காற்றால் யான் வருத்துதலைக் காதல் கூத்து அடுபவளாகிய அவள் அறிவாளோ?"-என்று பொருத்துக. கூத்துப் பார்ப்போர்க்கன்றி ஆடுவோர்க்குக் குளிர்த்துன்பம் இல்லை என்றவாறு. இவைபோல் நாவால் தூற்றுகின்றதை அவள் உன்னுவாளோ என்றபடி கவன்று, அறியாள் என்று தேறினள் என்க.
தேன் உண்பவர் மயங்கி யிருப்பதும், கூத்தாடுவார் அக்கூத்தின் நடிப்பில் ஒன்றியிருப்பதும் காதல் கொண்ட அவள் நிலைக்குக் காட்டாகும். வேற்றூர் போக முற்படுமுன், தனக்குப் பின்னால் வருகின்ற அலர் பற்றி ஏதோ சிறிது எண்ணியிருப்பினும் முழுதும் அறியாதவளாகையால் உன்னுவளோ நன்கு என்றாள்.
10) தனித்துணை-என்றது தான் கொண்டவனன்றித், தன் மகட்கு வேறு யாரும் துணையில்லாதது கருதி.

(அடுத்த பக்கம்)