பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்மொழி 71



(50-ஆம் பக்கத் தொடர்ச்சி)
எனவே, பெரியோரின் பெருமை கண்டு யாம் வியப்பதும் இல்லை; சிறியோரை இகழ்தல் அதனிலும் இல்லை.

"பெரியோரை வியத்தலு மிலமே

சிறியோரை யிகழ்த லதனின மிலமே",
-கணியன் பூங்குன் நகர் புறம் 192

.இதைப்போலவே கீழ்க் கொடுக்கப்பட்டு உள்ள பாடல் அடிகளும் அமைந்து இருப்பதைக் காண்க.

"உடன்று மேல்வந்த வம்ப மள்ளரை
வியந்தன்று மிழிந்தன்று மிலனே! அவரை
..........................................
கவிழ்ந்து நிலஞ்சேர வட்டதை
மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினு மிலனே"

இருவரில் யார் யாரைப் பார்த்து எழுதினார் என்பது கால ஆராச்சியாளர் காணவேண்டிய முடிவு ஆகும். பூங்குன்றன் பாட்டில், பெரியோரை வியத்தல் இல்லை; ஒருவேளை வியந்தாலும் சிறியோரை இகழ்தல் அறவே இல்லை, என்ற பொருளை "அதனினுமிலமே" என்ற தொடர் உணர்த்துகின்றது. எனவே, பெரியோரை வியப்பதினும் அறியாமை உடையது சிறியோரை இகழ்தல் என்று அறிந்தோம். "கிண்கிணி களைந்தகால்..." என்று தொடங்கும் பாடலிலும், "பகைவரை வியத்தலும் இழித்தலும் இல்லை: ஒருவேளை அவ்வாறு செய்தாலும் தனது வெற்றியால் செருக்கு அடைதலும் இழிசெயல் செய்தலும் அறவே இல்லை", என்ற கருத்தை "அதனினு மிலனே", என்ற தொடர் உணர்த்துகின்றது. எனவே, பகைவரை வியந்தலும் இழித்தலும் தவறு: அவற்றைவிட வெற்றியால் செருக்கு அடைதலும் இழிசெயல் செய்தலும் பெருத்தவறு என்று அறிந்தோம். ஏன்? களத்தில் நிற்கும் மறவன் பிறரைக்கண்டு வியப்பது அச்சத்தைக் குறிக்கும் இழித்தல் செருக்கைக் குறிக்கும். இராவணன் இவற்றிற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆவான். பகைவர் உண்மையிலேயே பெரியோராகவும் சிறியோராகவும் இருக்கவும், மறவன் என்ற முறையில் வியத்தலும் இழித்தலும் ஒரேவழி நிகழினும் இழுக்கு இல்லை. அனால், தன் வெற்றி கண்டு செருக்குக் கொள்


திருத்தம்
பக்கம் 5 வரி 4 பொறித்த என்பதை, பொரித்த என்றும்,
" 5 " 8 பொருமல்களில் " பொருமலில் "
" 6 " 1 கடையில் " கொட்பில் "
" 6 " 23 படியின் " பாங்கின் "
" 7 " 2 மடியிறுத்தி " மடியிருத்தி "
" 7 " 10 தலைவர்களை " தலைவரீர் "

திருதிக் கொள்க.