பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 தென்மொழி


ஊரைவிட்டு மாற்றிவிடுவது அல்லது வேலையை விட்டு நீக்கி விடுவது. மேலே இருக்கும் அலுவலர்களுக்கும் கூடத் தமிழ்ச் சார்பு- தமிழ்ப் பற்று இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் என்னைப் பற்றியும் சிலர் தவறாகக் கருதிக் கொண்டிருக்கின்னர். தமிழைத் தூய்மையாகக் காக்க வேண்டுமென்பதுதான் என் குறிக்கோள்.
தமிழிலே கலைச் சொல்லாக்கம் என்று சொன்னால் அந்தக் கலைச் சொல்லை ஆக்குவதற்குக் காரணமான அடிப்படையாகச் சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். "இந்தி முதலான பிறமொழிகள் எல்லாம் எத்தனையோ பிறமொழிச் சொற்காளைச் சேர்த்துக் கொள்கின்றனவே; தமிழில் ஏன் சேர்த்துக்கொள்ளக் கூடாது? ஆங்கிலச்சொற்களை அப்படியே வைத்துக் கொள்ளலாமே; ஏன் அவைகளை மொழி பெயர்க்க வேண்டும்?" என்றுகூடச் சிலரிடத்திலே கருத்தெழுகின்றது. அதற்காகத்தான் அடிப்படையாகச் சில கருத்துகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறேன். முதலாவது, தமிழர்கள் தெற்கே இருந்து வடக்கே போனார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். பலருக்கு இன்னும் இது தெரியவில்லை பல தமிழாசிரியர்களுக்கும் தெரியவில்லை; சில பேராசிரியர் களுக்குக்கூடத் தெரியவில்லை. தமிழ் வரலாற்று அசிரியர்களுக் கும் தெரியாது. ஆனால் சில வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கனவே நமக்குத் தெளிவாக கூறியிருக்கிறார்கள். பி.டி. சீனிவாச ஐயங் கார்- இராமச்சந்திர தீட்சிதர் போன்றவர்கள் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு ஆகியவற்றை எல்லாம் நீங்கள் நன்றாக எடுத்துப் பாருங்கள். அதற்குமேல் நான் மொழி நூலை, மொழியாராய்ச்சியை வரலாற்று அடிப்படை வைத்தே ஆராய்ந்திருக்கிறேன். வேறு சில கலை களின் துணை இன்றியமையாததாயிருந்ததால், அவற்றையும் தான் கற்றிருக்கிறேன். தமிழர் தெற்கே இருந்து வடக்கே போனவர்கள். அதாவது தெற்கே குமரி நாடு என்று ஒரு பெரிய நிலமிருந்து மூழ்கிவிட்டது. இங்கே இருந்துதான் வடக்கே போனார்கள். கால்டுவெல் அவர்களால் திராவிட மொழிகள் 13 என்று கணக்கிட்டு இருப்பவை, 19 என்று கணக்கிடப்பட்டிருக் கின்றன. இவையல்லாம் இந்தியா என்ற நாவலந் தீவுக்குள் ளேதான் வழங்குகின்றன. இவற்றுள்ளே சிறந்த பெருமொழி களெல்லாம், இலக்கிய மொழிகளெல்லாம் இந்தத்தென்னாட்டிலே தான் வழங்குகின்றன வடக்கே போனால் திராவிடமானது திரித்தும், சிறுத்தும், சிதைத்தும் போகின்றது. இன்னும் போனால் வடநாவலத்தில், பலுசித்தானிலே ஒன்றும், வங்காளத்தில் ஒன்றுமாக வடஇந்தியாவிலே சிதறிக் கிடைக்கின்றன. தெற்கே வர வரத் திராவிடமானது திருந்திக் கொண்டு வருகிறது. நாற் பெரும் திராவிட மொழிகளெல்லாம் தென்னாட்டில்தான் இருக்