பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 93 ணாயனார் வள்ளுவர் திருக்குறளைத் தமது நூலிலெடுத் தோதி யிருத்தலால் வள்ளுவர் சேரமான் பெருமாணாய னாருக்கு முன்னுள்ளவரென்பது நிச்சயிக்கப்படும். சிலர் ஒளவை சேரமான் பெருமா ணாயனார் காலத்திருந்தமை யால் திருவள்ளுவரும் சேரமான் காலத்தவரேயாதல் வே ண்டுமென்பர். ஒளவையார் அதிகமான் கொடுத்த அற்புத நெல்லிக்கனியை யுண்டு ஆயுள் நீட்டம் பெற்றுப் பன் னூறாண்டுயிர் வாழ்ந்திருந்தவர். அவருடைய ஆயுட்கா லத்திலொருவர்பின் னொருவராயெத்தனையோ வரசரிருந்து போயினர். ஆதலால் ஓளவையாருடையவார்த்திகதிசையி லிருந்தவர்களுடைய காலத்தைக் கொண்டு வள்ளுவர் கா லத்தை நிச்சயித்தல் கூடாது உக்கிரப் பெருவழுதிகடைச் சங்கத்துக் கடையரசன். கடைச்சங்கம் ஆயிரத்தெண் ணூறு வருஷங்களுக்கு முன்னரிருந்தது. இற்றைக்கு ஆயிரத்தெழுநூற்றறுபத்தைந்து வரு ஷங்களுக்கு முன்னே விளங்கிய கரிகாற் சோழன் காலத் து நூல்களாகிய மணிமேகலையினுள்ளுஞ் சிலப்பதிகாரத் தினுள் ளும் மேற்கோளாகக் கொள்ளப்பட்ட திருக்குறள் அவ்விரு நூல்களுக்கு முன்னர்த் தோன்றியதென்பது தா னே போதரும். சிலப்பதிகார நாற்காலம் ஆயிரத்தெழுநூற் றறுபத்தைந்து வருஷங்களுக்கு முற்பட்டதென்பது. மகா வமிச்மென் னு நூலினுள்ளே வருங் கயவாகு காலத்தாற் றுணியப்படும். ஆகவே திருவள்ளுவர் காலம் ஆயிரத்தெ ண்ணூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னுள்ளதென்பது நன்றாக நிச்சயிக்கப்படும்.* இன்னும் இலங்கையை வெற்றிகொண்டு இற்றைக்கு இரண்டாயிரத்தறுபது வருஷங்களுக்கு முன்னர் அரசு புரிந்த சோழமண்டலத்தானாகிய ஏலேல சிங்கனுடைய பெளத்திர பௌத்திரனுக்குப் பெளத்திரனாகிய ஏலேல