பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. சிங்கன் என்னும் பிரபுவுக்குத் திருவள்ளுவர் நண்பின ரென்றும், அப்பிரபுவினது கலமொன்று கடலோடிமீண்டு வந்து பாரிற்பொறுத்து மிதவாது கிடந்தபோது திருவள் ளுவர் ஏலேலையா " வென்று கூறித் தொட்டபோது மித ந் ததென்றும், பாரமிழுப்போர் இன்றும் ஏலேலையா" என்று சொல்லி யிழுப்பது அன்று தொட்ட வழக்கென் றும் வரும் கன்ன பரம்பரையா லும் மேலேசெய்த கால நிச்சயம் வியவஸ்தாபன மாம். இரண்டாயிரத்தறுபதில் ஏலேலசிங்கனுடைய பிற்சந்ததி ஆறினுக்கும் இரு நூறு வருஷம் வாங்க எஞ்சுவது ஆயிரத்தெண்ணூற்றறுபது. எலேலசிங்கன் இலங்கையை வெற்றிகொண்டகாலம் இர ண்டாயிரத்தறுபது வருஷங்களுக்கு முன்னரென்பது மகாவமிசத்திற் காண்க. சிங்கன் என்னும் பட்டப்பெயர் சோழமண்டலத்திலுள்ள இவனுக்கு வந்தது தன்மர பி னர் இலங்கையரசுபெற்ற காலத்தைப் பெயரோடு விளங் கினமையாற் போலும், யேசுசமயிகள் தமது சமயத்தவராகிய தாமசு, முனி வர் மைலாப்பூரில் வந்திருந்தபோது திருவள்ளுவரென் னும் பெயரோடு விளங்கின ரென்றும் அவர்காலம் யேசு வுக்குப்பின் ஐம்பதாம் வருஷமென்றுங் கூறும் வெளிற் ஹனுமானவுரையுமிந்நிண்ணயத்துக்கொரு சான்றாம். இனி திருவள்ளுவ மாலையிற் கல்லாடராற் கூறப்பட்ட வெண் பாவும், கல்லாடமென்னு நூலிலே அவர் கூறிய அகவற் கூறும் ஒத்த கருத் தின வாதலின், திருவள்ளுவமாலை பிற் காலத் தாராற் பாடி யொட்டப்பட்டதென்பது அறியா மையின்பாலது. அவை வருமாறு:-- திருவள்ளுவமாலை யிற் கல்லாடர் கூ றி ப து:-"......... எப்பா லவரு மியைபவே வள்ளுவனார் முப்பான் மொழிந்த மொழி” கல்லாடம் சமயக் கணக்கர் மதிவழி கூறா- துலகியல் கூறிப் பொ