பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 95 ருது வென் ற- வள்ளுவன் றனக்கு வளர்கவிப்புலவர் முன்" . திருவள்ளுவர் உலகியல் நெறி வீட்டியல் நெறி இர ண்டும் நன்றாக விசாரித்துண் மையுணர்ந்தவர். மாந்தர்க்கு இல்லறம் துறவறமென்னும் இருவகையறங்களுமே உரி யன வென்பதும், அவற்றுள் துறவறத்தை நோக்கியே இல் லறம் சாதிக்கத்தக்கதென்பதும் வீடு தேடுவார்க்குத்துற வறமும் உலகந்தேடுவார்க்கு இல்லறமு முரியனவென்ப தும் அவர் சித்தாந்தம் இல்லறவியல்பு கூரப்புகுந்த திரு வள்ளுவர் "அன்பிலாரெல்லாந் தமக்குரியரன்புடையா- ரென்புமுரியர் பிறர்க்கு" என்னுந் திருக்குறளால் அன்பே அதற்குச் சிறந்த விலக்கணை மென்றும், துறவுக்கிலக்கண ங்கூறுமிடத்து, "அவா வென்ப வெல்லா வுயிர்க்கு மெஞ்ஞான்றுந் - தவா அப்பிறப்பினும் வித்து" என்னுங் குறளால் அதற்கு அவா வின்மையே சிறப்பிலக்கண மென்றும், சித்தாந்தஞ் செய்திருத்தலை ஊன்றி நோக்கினால் அவருடைய அற்புத தெய்வப்புலமையினாற்றல் நன்கு புலப்படும் திருவள்ளுவர் நூற்று முப்பத்து மூன்று விஷயங்களெடுத்து நூல்யாத் தனர். ஒவ்வொரு விஷயங்களும் எஞ்சாமற் கடைபோக அவரால் விசாரித்து நிச்சயம் பண்ணப்பட்டிருத்தலின் எத்துனைப்புத்திநுண்மையாரும் ஒரு விஷயத்திலாயினும் ஒன்றைக் கூட்டவேனுங் குறைக்கவேனும் இடங்கர்ண மாட்டார். திருவள்ளுவர் எடுத்துக்கொண்ட விஷயங் களுட் சிலவற்றைத் தாமாக விசாரித்தபிறபாஷைப்புலவரு ட்டலையானோர் அவ்விஷயங்கள் மேற்கூறிய வற்றையும் திரு வள்ளுவர் கூறியவற்றையு மொப்பு நோக்குமிடத்துத் திரு வள்ளுவர் கருத்துக்களே விஞ்சி நிற்றலின், அவரின் விஞ் சினோர் பிறரில்லை எனலே சித்தாந்தமாம். அது பற்றியே