பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தென்மொழி வரலாறு. திருக்குறள் கிரேக்க பிராஞ்சிய லத்தீன் ஆங்கில முதலிய பாஷைகளிலே மொழிபெயர்க்கப்பட்டு அத்தேயங்களிலே சென்று வழங்குவதாயிற்று. திருவள்ளுவர்க்கு முன்னும், முனிவரும் புலவரும் அறம்பொருளின்பமென்னும் முப் பாற்பொருளு மொருவாறெடுத்துக் கூறினரேனும், அவ ரெல்லாம், திருவள்ளுவரைப்போலக் கேட்டார் நெஞ்சி னுட்பாய்ந்து பதிகொள்ளுமாறு சொல்லுஞ் சொல்வன் மையுஞ் சாதுரியமு முடையரல்லர். "எழுத்து முதலாய் விலக்கண மெல்லாம் பழுத்தினி துறங்கும் பள்ளி” என்று புகழப்பட்ட திருக்குறட் சிறப்பு எழுத்திலடங் குவதன்று. திருவள்ளுவரை ஆருகத சமயியென்று சிலரும், சை வசமயியென்று பலரும் வாதிப்பர். ஆயினும் வைதிகாசா ரங்களை மேற்கொண்டு நிற்குந் திருக்குறட்கருத்தை நோ க்க அவரை ஆருகதரென்று சாதிக்கப் போந்த நியாயங் காண்கிலம். தமிழ்ப்பாஷைக்குச் சிரோரத்தினமாக விளங்கும் இத்திவ்விய நூல் தெய்வப்புலமைத் திருவள் ளுவ நாயனார் ராற் செய்யப்பட்டது. அறம் பொருள் இன்ப மென் னும் முப்பாற் பொருளை யும் எஞ்சா மல் எப்பாற் சமயத் தோர்க்கும் ஒப்பக்கூறும் அற்புத நூல். இதற்கிணை யான நூல் உலகத்தில் மற்றெப் பாஷையிலும் இல்லை. இதற் குரைசெய்தவர் தருமர் முதற் காளிங்கரீறாகிய பதின்மர் அவருட் பரிமேலழகருரையே வள்ளுவர் கருத்தை உள்ள வா றுரைப்பது. திருக்குறள் நூற்று முப்பத்து மூன்று அதிகாரமும் ஆயிரத்து முந் நாற்று முப்பது திருக்குறளு முடையது. சங்கப்புலவர்களாலே அந்நூலைப்பாராட்டிச் செய்யப்பட்ட பாமாலை திருவள்ளுவமாலை யெனப்படும். அதற்குரைசெய்தவர் திருத்தணிகைச் சரவணப்பெருமா